பக்கம்:பாற்கடல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

ந்தத் தலைப்பில் 'அமுதசுரபி'யில் என் கதை, ஒரு தீபாவளி மலரில் வந்தது. எனக்குப் பெயரைத் தேடித் தந்த கதைகளில் ஒன்று.

பாற்கடலிலிருந்துதான் லக்ஷ்மி வந்தாள்.

ஐராவதம் வந்தது. உச்சைஸ்ரவஸ் வந்தது.

ஆலகால விஷம் வந்தது. கடைசியில் அமிர்தமும் வந்தது.

யானையையும் குதிரையையும் இந்திரன் எடுத்துக் கொண்டான்.

லசுஷ்மியை விஷ்ணு மார்பில் வைத்துக்கொண்டார்.

சிவனுக்கு விஷம் பங்காயிற்று.

தேவர்களுக்கு அமுதம்.

கூடக் கடைந்த அசுரர்கள் ஏமாந்து போனார்கள்.

ஏனெனில் தேவர்கள் நல்லவர்கள்.

அசுரர்கள் கெட்டவர்கள். 'அளவுகோல்' தேவாதி தேவனுடையது.

நீ அவல் கொண்டு வா - நான் உமி கொண்டு வருகிறேன்.

கலப்போம். நீ ஊது. நான் தின்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/7&oldid=1532862" இலிருந்து மீள்விக்கப்பட்டது