பக்கம்:பாற்கடல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

71


”மூக்குத்தி என்கிற பேரிலே சின்னதும் பெரியதுமா ரெண்டு நட்சத்திரங்கள் ஜ்வலிக்கிறதுகள். அந்தக் கண்களின் ஒளி...” ஐயா கண்களைப் பொத்திக்கொண்டு விலங்குபோல் தலையை உதறிக்கொண்டார்.

கடல் இருட்டின்மேல் மணிக்கூண்டு கதிர்ப் பாய்ச்சல் –

லால்குடி சுற்று வட்டாரத்தைத் தாண்டாத ஐயா, மணிக்கூண்டையும் கடலையும் எங்கு பார்த்தார்? எப்போ பார்த்தார்? முதலில் இந்த பாஷையே ஐயாவுடையது இல்லை.

”கண்களின் ஒளி வீச்சின் கூசல் அதன் பின்னால் அந்த முகத்தைச் சரியாகப் பார்க்கவிடலே. முகம் கோட்டுக்குள் அடைச்ச நிழலாப் போச்சு. ஆனால் அந்தக் குறுஞ்சிரிப்புக்கூடவா ஒளி வீசும்? இடுப்பில் ஒரு கை, மறு கையில் சாட்டைபோல் பின்னலைச் சுழட்டிண்டு.”

”நான் திகிலாயிட்டேன். இருக்கிற தைரியத்தை, மனசை ஒண்ணு கூட்டிண்டு கண்ணை இறுக மூடிண்டு “யாருடி நீ? இங்கே எப்படி வந்தே? பெருந்திரு மேல் ஆணையா சொல்றேன் இங்கேயிருந்து ஓடிப்போ !”

”கடகடன்னு சிரிக்கிற சத்தம் கேட்டது. ஓடிப்போற கொலுசின் ஓசை கர்ப்பக்ருஹத்துள் ஒடி மறைஞ்சுடுத்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியாது.”

தலை தொங்கிப்போச்சு. தாத்தா ஐயாவைக் கட்டிண்டு, விக்கி விக்கி அழுதார்.

”ஐயா, குடி கெடுத்தையேடா! ஆயுசுக்கும் நான் என் பாட்டு நோட்டைக் கட்டிண்டு என்னத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/77&oldid=1533311" இலிருந்து மீள்விக்கப்பட்டது