பக்கம்:பாற்கடல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

ன் பிள்ளைப் பருவத்தினிலே கிராமத்தில், பந்தி போஜனத்தின்போது ஒரு பழக்கம் உண்டு. பாயசம் தாண்டி மோருக்குமுன், வீட்டு எஜமான், “ஏ நாணு, ஒரு சுலோகம் பாடேன்! ஏய், எல்லோரும் கொஞ்சம் சத்தம் போடாமே இருங்கோ, நாணு சுலோகம் பாடப் போறான் - ஊம் - ஆரம்பிக்கட்டும் - யாரங்கே? பாயசம் இன்னொருதரம் பந்தி பூரா விசாரியுங்கோ."

அவ்வளவுதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு,

'மாதா ராமோ மத்பிதா ராமச்சந்த்ரா ப்ராதா ராமோ...!

நாணு பிடித்தாரானால், அன்று சாரீரமும் ‘வபை'யாக வாய்த்துக்கொண்டு, ராகமாலிகையில் இறங்கிவிட்டாரானால், மோருஞ்சாதத்துக்குக் கை காய்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். தாம்பாளத்தில் சாதத்தின் மேல் ஈ அப்பும். யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. அந்த ஸ்லோகம் முடிந்தவுடன், "மாணிக்க வீணா முபலாலயந் தீம்.' நாணு இன்னொரு சுலோகத்துக்குத் தாவிவிடுவார். மோருஞ்சாதம் வேண்டாம் என்று யாரும் பந்தியை விட்டு எழுந்து செல்ல முடியாது. அந்த மாதிரி அநாகரிகத்தை யாரும் நினைக்கவே முடியாது. உடனே தேவாரம், தோடுடைய செவியன். அடுத்து, துள்ளுமத வேள்கைக் கணை யாலே' - விளாசு விளாசு என்று விளாசித் தள்ளி விடுவார். ஆடச்சொல்லி அஞ்சு பணம், ஓயச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/79&oldid=1533313" இலிருந்து மீள்விக்கப்பட்டது