பக்கம்:பாற்கடல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

75


வெளிவருவதில்லை எனும் புகாருக்கு ஆளாகியிருக்கிறேன். தெருவுக்கு வந்து சற்றுக் காற்று வாங்குவோமே! பாயசத்துக்கும் மோருஞ்சாதத்துக்குமிடையே ஸ்லோகம் லேசான intervat தெருவில் நின்று உங்கள் கைகளை மோருஞ் சாதத்துக்குக் காயவைக்கப் போகிறேன். திஜர. சொன்னது நினைவுக்கு வருகிறது.

"கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ, கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கறுப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்தி சார்ஜ், துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறு என்ன?” திஐர. பெரிய ஆள். எவ்வளவு உண்மையான வார்த்தை! கதைக்குரிய இலக்கணம் அத்தனையும் அவருக்கு அற்றுப்படி. வகுப்பு நடத்தமாட்டார். அவர் சொல்ல வந்தது யாதெனில், கதைக்குக் கரு, பார்க்கும் கண்ணுக்கு எப்பவும் காலிலேயே இடறக் காத்திருக்கிறது.

கட்டுரையின் உருவம் வேறு தவிர விஷயமும் அதே விதம்தான். கத்தரிக்காய்ப் பாவாடை (முதலில் அது பாவாடையா, அந்தக்காலத்து BA குடுமி மாதிரி அப்பளக்குடுமி நடுவில் ஆணிக் குடுமியா ? BA குடுமி என்றால் தெரியுமா? கல்லூரி மாணவன் ஆசாரம் கெடாமல் வைத்துக்கொண்டிருக்கும் அப்பளக் குடுமி நடுவில், குருவி வால்போல் இன்னொரு சின்னக் குடுமி நீள மயிருடன் வளர்ப்பான். நள்ளிரவில் எழுந்து படிக்கும்போது தூக்கம் வரும் அல்லவா? சுவரில் ஆணியில் கயிறு நுனியைக் கட்டி, மறு நுனியை, நடுக்குடுமியின் குஞ்சத்தோடு கட்டிக்கொண்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/81&oldid=1533315" இலிருந்து மீள்விக்கப்பட்டது