பக்கம்:பாற்கடல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

லா. ச. ராமாமிருதம்


தூக்கத்தில் சாமி ஆடும்போது அவ்வப்போது கயிறு இழுத்து, விழிப்பைக் கொடுத்து பரீட்சைக்குப் படிப்பைக் காப்பாற்றும்) - கத்தரிக்காய்க் காம்பில் ஆரம்பித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைத் தகராறில் கொண்டுபோய் முடிக்கலாம். இது சாக்கில் கேட்கிறேன் அல்லது கேட்டுக்கொள்கிறேன். எட்டு மாமாங்கம் காத்திருந்தாலும், இந்தப் பிரச்சினை உண்மையில் தீரப்போகிறதோ? இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா? (அல்லது குடித்ததா என்று சொல்ல வேணுமா?) என்று டிராகன் தன் மேல் உதட்டைப் பிளந்த நாக்கால், நக்கிக்கொண்டிருக்க, குழந்தை, கனவில் அம்மாப்பால் நினைப்பில் நாக்குச் சப்புக்கொட்டுவது போல, பாரதம், குரங்கு நியாயத்தின் தர்பாரைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதானா? கட்டுரையின் போக்குக்கு இதையே ஒருமாதிரியாக எடுத்துக்கொள்ளலாம் என்று நான் நினைத்துக் கொள்ளட்டுமா? தவிர என் கொள்ளுப்பேரனுக்குச் சிரிக்க, இது சாக்கில் BA குடுமித் தகவல் கிடைச்சுப் போச்சு. “Savages! அவன் இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அவன் குரல் கேட்கிறது.

குடிகாரனின் தள்ளாட்டம் போல் கால்போன வழிதான் தன்வழி என்பதுதான் கட்டுரை வழி என்று முடிவு அல்ல.

மனச்சாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தா க்ஷண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடை போன்ற சொல் செட்டு, அதேசமயத்தில் சரளம், நையாண்டி - இப்படியும் கட்டுரைகள் உண்டு. தி.ஜரவின் பேனாவிலிருந்து புறப்பட்டவையே இந்த இலக்கணங்களுக்கு சாக்ஷி. வரலாறு - இது ஒரு வம்பு சமாச்சாரம். சர்வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/82&oldid=1533355" இலிருந்து மீள்விக்கப்பட்டது