பக்கம்:பாற்கடல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

லா. ச. ராமாமிருதம்


கிறார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு விழிக்கிறார்கள். ராகம் அவர்களுக்கே பிடிபடவில்லை என்றால் நாங்கள் பாமர மக்கள், அதிலும் நான் அரை டிக்கெட் எந்த மூலை? ஆனால் நாதப்பிழம்பு சபையோரைத் தன் பாகில் கட்டி, இன்னும் புறப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பிடில்காரர் ஜாக்கிரதையாக, பாடகர் காட்டும் வழியே நூல் பிடித்துக்கொண்டு வருகிறார்.

திடீரென்று டைகர் வரதாச்சார்யார் எழுந்தார். சபையென்று கூடப் பாராமல் மேடைக்கு வந்து பாடகரைக் கட்டிக்கொண்டு, "அடே விசுவநாதா! தேவமனோகரியை இவ்வளவு விஸ்தாரமாக ஆலாபனை பண்ணி இன்னிக்குத்தான் கேக்கறேண்டா !”

பாராட்டுபவர் தியாகய்யர்வாளின் நேர் சிஷ்ய பரம்பரை பாடுபவர் வர ப்ரஸாதி. மனோதர்மத்துக்கு மறுபெயர் மஹாராஜபுரம். தவிர அழகன். ஸ்பா ரஞ்சிதன். வெளித்தோற்றம், உண்மையான சரக்கு இரண்டும் சேர்ந்துதான் ஒரு குறிப்பிட்ட effect முக்கியமாக சங்கீதத்தில் விளைகின்றது. சம்பவத்துக்கு என் சாயம் அளவுமீறி ஏறுமுன் நிறுத்திக்கொள்கிறேன்.

இங்கு நான் உறுத்திச் சொல்ல முயல்வது யாதெனில், தேவமனோகரி ஆலாபனை பழக்கத்தில் வராததால் அதற்குரிய ஆரோஹண அவரோஹண ஸவரங்கள், இயக்கவரம்புகள் இல்லாமல் போய்விடுமா? அஃதில்லாமல், அதன் விதிப்பயனாய், அதை அடையாளம் கண்டு கொள்ளல் இயலுமா? பிரண்டால் பூகம்பம் அல்லது வேறு ராகம் தேவமனோகரி இல்லை.

அதேபோல், எழுத்துக்கும் ஸ்வரம் உண்டு. அனு ஸ்வரங்கள் உண்டு. கால ப்ரமாணம் உண்டு. லயமுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/86&oldid=1533359" இலிருந்து மீள்விக்கப்பட்டது