பக்கம்:பாற்கடல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

லா. ச. ராமாமிருதம்


கொண்டால் பாதை மாறிவிடும். மறுபடியும் வேளையும் இடமும் கொடுக்கையில் சொல்கிறேன்.

கதை, கட்டுரை, வரலாறு, கவிதை, உரத்தசிந்தனை, இவை தாண்டி, எழுத்தில் - ஏன், பரிசோதனையில் இன்னொரு கட்டம் இருக்கிறது. அதை நான் அடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் இருக்கிறது. அதன் சாயலை உள் பிரக்ஞையில் தூரதிருஷ்ட யாக உணர்கையில்…….

பாஷை எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ஆனால் பற்றாத இடங்கள் வேணது உண்டு. இது சமயங்களுக்குத் தனி பாஷையே வேணும் என்பது என் கருத்து. போதாததற்கு எனக்கு ஏற்கெனவே தமிழ் போதாது. நான் தமிழ்ப்பண்டிதர் பேரன். ஆனால் நான் தமிழ் படித்தவன் அல்லன். என்னைச் சுற்றியிருக்கும் நவயுக இளம் எழுத்தாளர் சிலருக்கு இருக்கும் தமிழ்ப் பாண்டித்யம் எனக்கு பிரமிப்பாயிருக்கிறது.

நான் குறிக்கும் நிலையை ஓரளவு உணர்த்த ஆங்கில வார்த்தைகள்தான் சிரத்தையாக இப்போது தோன்றுகின்றன. Legend, fable, parable, விஷயமும், சொல்லும் விதமும் ஒன்றாகி, அதன் தாய்மையில் தோய்ந்துபோய்,

அதன் பூணூலை அறுத்துக்கொண்டு,
மானுடம் எனும் பண்பில் மூழ்கி
ஜீராவில் ஊறி ஊறி நைந்து
போன ஜாங்கிரி போல்
உத்திகள் இற்றுப்போய்
நிபந்தனைகளிலிருந்து விடுதலை அடைந்து
எழுதினவன் எழுதினதில் மறைந்துபோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/88&oldid=1533361" இலிருந்து மீள்விக்கப்பட்டது