பக்கம்:பாற்கடல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

3


நடு

முடிவே அற்று

நான் இருப்பதை

என்னால் தவிர்க்க முடியாது.

"யாருக்கு? எதற்கு? ஏன்? கேள்விகள்தான் பங்கின் பாஷை."

தி.ஜ. ர. சொல்வார்: "எழுதுவது நீந்துகிற மாதிரி தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக்கொண்டு வேளை பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் குதி, குதித்துவிடு.”

தி.ஜ.ர. பெரிய ஆள். அவருடைய தரத்தை யாரும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொண்டவர், தெரிந்துகொண்டவரைப் பறைசாற்றவில்லை. அவரும் சாற்றிக்கொள்ளவில்லை. செட்டியார் மிடுக்கா, சரக்கு மிடுக்கா என்ற முறையில்தானே பண்டம் விலை போகிறது! தம்பட்டம் வாழ்க்கையின் உயிர்நாடி.

எனக்குப் பதினான்கு வயதிலிருந்து அவர் பழக்கம். இடையிடையே எங்கள் தனித்தனி லௌகீகங்களில் எங்கள் பாதை பிரிந்ததெனினும் எங்கள் உறவுக்குப் பங்கம் இல்லை. கடைசியாக உத்யோக ரீதியில் தென்காசியில் இருந்தேன். அது குற்றாலம் கிட்ட என்பதோடு சரி. தகவல் சட்டென்று எட்டாத இடம். ஓய்வு பெற்று நான் சென்னை திரும்பிய பின்னர்தான் அவர் மறைவு பற்றி அறிந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/9&oldid=1532894" இலிருந்து மீள்விக்கப்பட்டது