பக்கம்:பாற்கடல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

லா. ச. ராமாமிருதம்


தெரியாதவன் என்று கேலி. எல்லோரும் கல்லை எறிகிறார்கள். நானும் என் பங்குக்கு எறிகிறேன். வேறு என்ன காரணம் வேண்டும்? பின்,

“பாலைவனத்தில் அநேக புஷ்பங்கள் பார்ப்பவர் அற்றுக் கன்னம் சிவக்கின்றன” என்று சொன்னவன் பைத்தியக்காரனா?

ஒன்று எப்பவும் நெஞ்சில் இருத்திக்கொள்வோம். தகுதியும் அதற்கு உரிய வெகுமதியும் - இவைகளின் வழிகளே வெவ்வேறு. துருவ தூரம் என்பதை விதியாக ஏற்றுக்கொண்டால்தான் பிழைத்தோம். லட்சியம், தகுதி, லக்ஷ்மி கடாக்ஷம் மூன்றும் ஓரிடத்தில் ஒருங்கே சேருவது என்பது வெகு அபூர்வம். அதற்கும் காரணம் இல்லாமல் போகாது. ஆனால் அதை ஆராய்ந்து அறிந்து தெளிய அதற்கு ஒரு தனித்தகுதி எய்தல் வேண்டும்.

இதனால்தான் ஞானத்தின் விடிவை அடையாளம் கண்டுகொண்ட மஹாபுருஷன் (ரமணர் போன்றவர்) தப்பித்தோம் என்று வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். நம்மிடம் அந்தத் திராணியிருக்கிறதா? - ஹும். இந்தப் பொருமலுடன் இந்த ஏக்கம் சரி.

சரி. இருள் இறங்குகிறது. உள்ளே போகலாம்.

இருட்டில் கூடத்தில் தனியாக உட்கார்ந்திருக்கிறேன்.

மின்சாரம் அம்பேல். மனைவி பிறந்தகம் போயிருக்கிறாள்.

இன்று 'ஹிந்து' செய்தி. சட்டத்தில் ஒரு நுணுக்கம் தெளிவாகும் வரை, பில்லா, ரங்காவைத் தூக்கு ஜனவரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/92&oldid=1533365" இலிருந்து மீள்விக்கப்பட்டது