பக்கம்:பாற்கடல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7

மீண்டும் ஞாபகத்துக்கு (எனக்கு அல்ல!) :

என் பாட்டனாரும் அவர் உடன்பிறந்தோரும்.

1. ஐயா, The Legend. எல்லோருக்கும் மூத்தவர்.

2. எல்.ஏ. ராமஸ்வாமி ஐயர்: என் பாட்டனார்; லால்குடி போர்டு ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்.

3. எல்.ஏ. சிதம்பரம் ஐயர்: போலீஸ் இலாகா - குமாஸ்தாதான்; ஆனால் அவருக்கு எட்டுக் கண்ணும் விட்டெறிந்தது. கான்ஸ்டபிள், ஸ்ப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் வரை அவரவர் காரியங்களுக்கு ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து தப்புவதிலிருந்து பதவி உயர்வுக்குக் குறுக்கு வழி, கோணல் வழி வரை) இவர் வாசலில் காத்துக் கிடப்பார்கள். ஆபீஸ் நெளிவு சுளிவுகள் அற்றுப்படி, ஆங்கிலத்தில் சூரன். மேலதிகாரி ஆங்கிலேயன். அவர் கை காட்டிய இடத்தில், கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடுவான். காம்ப் க்ளார்க் மேல் அவ்வளவு அபார நம்பிக்கை. எத்தனையோ பேருக்கு வழி திறந்துவிட்டிருக்கிறார்; அடைத்தும் இருக்கார் (இலாகா அப்படி). இத்த னைக்கும் படிப்பு மெட்ரிகுலேஷன் வரைதான்.

4. எல்.ஏ. சுந்தரம்: உப்பு இலாகா.

5. லக்ஷ்மி: புக்ககம் லால்குடி பக்கத்தில் வாளாடியில். கைநாடி பிடித்துப் பார்த்து உடல்நிலை சொல்வதில் அவ்வளவு நிபுணியாம். அவளுக்குச் சொல்லிக் கொடுத்த வைத்தியனே அவளிடம் யோசனை கேட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/96&oldid=1533369" இலிருந்து மீள்விக்கப்பட்டது