பக்கம்:பாற்கடல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

91


அளவுக்குத் தேறிவிட்டாள். வெகு சீக்கிரத்தில், விளையாட்டாக ஆரம்பித்ததுதான்.

"அதெல்லம் அம்சம். என் வீட்டில், பரணில் நாடிசாஸ்திரம் பற்றி மட்டுமே, அடுக்கடுக்கா புஸ்தகங்களும், ஓலைச்சுவடிகளும் கிடக்கு, பாட்டனார் படிச்சது. நானும் படிக்காமல் இல்லை. ஆனால் லக்ஷ்மி அம்மாளின் தரிசனம் எனக்குக் கிட்டுமா?”

6. எல்.ஏ. ஜகதீச ஐயர், பி.ஏ.பி.எல். இவர் வக்கீலுக்குப் படித்ததாகத் தெரியுமே ஒழிய, தொழில் நடத்தினதாகத் தெரியவில்லை. வயிற்றுக் கோளாறில் நொந்த முகம். தினம் பொரித்த குழம்பு, பத்தியச் சாப்பாடு.

7. ப்ரவ்ருத்த ஸ்ரீமதி புக்ககம் லால்குடிக்கு அடுத்த ஆங்கரையில்.

8. எல்.ஏ. பிச்சு: கடைக்குட்டி, போலீஸ், தாத்தா இறந்த சமயம், இவர் லால்குடிக்கு ஈமச்சடங்குகளுக்கு வந்திருந்தபோது நான் முதன்முதலாகப் பார்த்தது. எனக்கு அப்போது வயது 10, 12 இருக்குமா? இல்லை; இன்னும் குறைவுதான். (ஏழு, எட்டு?) அவர் அதிகமாக யாருடனும் பேசிக் கலகலப்பாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆஜானுபாகு, தலையில் அடர்த்தியான கன்னங்கரேல் மயிர். பரந்த முகத்தில் குத்துமீசை, (அல்லது கொத்துமீசையா? என்னவோ எலுமிச்சம் பழத்தை நுனியில் வைத்துப் பார்க்கிறதாமே! அந்தக் காலத்து பாஷை, போலீஸ் ஆனதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது)

அடுத்து இருபது இருபத்துஐந்து வருடங்களுக்குப் பின்னர்தான் மறுபடியும் பார்க்க வாய்த்தது. வேலையிலிருந்து ஓய்வுபெற்று லால்குடி வாசத்துக்குத் திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/97&oldid=1533373" இலிருந்து மீள்விக்கப்பட்டது