பக்கம்:பாற்கடல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

93


இந்தக் குடும்பத்தில் ஆண் - பெண் அனைவருமே, ஏதோ உக்கிரம் படைத்தவர்கள். வெளித் தெரியாவிட்டால், உள் புழுங்கும் உக்கிரம். காவிய நாயகம் உண்டோ இல்லையோ, காவியத்தன்மை படைத்தவர்கள். எல்லோருடைய தன்மையிலும் ஏதோ விபரீதமும் - (விரல் வைத்துச் சொல்ல முடியாது) - கட்டு மாத்திரை உரை சொட்டு மருந்துபோல் கலந்திருந்தது. அடிப்படை குரூரம்கூட என்று சொல்வேன். தவிர, தனி வர்க்க எண்ணம். (Clannishness).

காரம், பூரம் எல்லாம் சேர்ந்துதான் உயிர் காக்கும் லேகியம் அல்லது சூரணம் ஆகிறது.

பாற்கடலின் கடையலில் வாசுகி கக்கிய விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டான் எனினும் ஒரு சிறிதேனும் கடலில் கலவாது இருந்திருக்குமா? அதுவும் பின்னர் திரண்ட அமிர்தத்துடன் கலந்துதானே இருக்கும்? இல்லையென்று நான் நம்பத் தயாராக இல்லை. என் எண்ணம் என் உரிமை - (சரி, சரி, வண்டி ஸைடிங் மாறுகிறது, கவனி!)

ஆனால் வீட்டுக்கு வீடு, குடும்பத்துக்குக் குடும்பம் அவரவர்களுக்குத் தங்களைப் பற்றி எண்ணம் இப்படித் தான் இருக்குமோ என்னவோ? எண்ணச் செருக்கு ஏறத்தாழ, அவ்வளவுதானே! இதுகூட இல்லாவிடின், பின் எப்படி? இத்தனை செருக்குகளின் திரட்சிதானே மானுடத்தின் பெருமிதம்!

பெரியோரைப் புகழ்வோம்.

ஆண்களுக்குப் பொதுவான, அடித் தலைமுறைகளுக்கும் இறங்கிவிட்ட ஒரு அங்கசேஷ்டை உண்டு. பத்மாஸன ஆரம்பத்தில், ஒரு காலை மடித்து, அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/99&oldid=1533375" இலிருந்து மீள்விக்கப்பட்டது