பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனே 7

மழைக் கோட்டால் மூடப்பட்டு உத்தியோக உடுப்பில் கிடந் தார் ஈசுவரன்! பாறைக்ளால் நசுக்கப்பட்டிருந்த அவரது முகம் தொப்பிக்குள் பயங்கரமாகக் காட்சி அளித்தது. கைப்பக்கத்தில் திறந்து கிடந்த நிலையில் பவுண்டன் பேணு அளவுக் குறிப்புகள், மேலதிகாரியின் ஸ்தல உத்தரவுகள் எழுதப் பட்ட சிறிய குறிப்புப் புத்தகம் மழையில் ஊறிக் கிடந்தது. பையில் மறுநாள் மனைவிக்கு மருந்து வாங்க டவுனுக்குப் போய்வர அனுமதி கோரிக் கடிதம் ஒன்று இருந்தது. -

சங்கரனுக்கு ஏனுே பேச வாய் எழவில்லை. பேச வேண்டு மென்ருே என்ன பேசுவதென்ருே தெரியவில்லை. -

துாரத்தில் கூலியாள் குப்புசாமியுடன், ஈசுவரனின் எட்டு வயதுப் பையன் வந்து கொண்டிருந்தான். -

"அப்பா ராத்திரி மழை பெய்ய ஆரம்பித்தவுடனே கோட்டெல் லாம் போட்டுண்டு எங்கேயோ புறப்பட்டுப் போளு, இன்னும் வீட்டுக்கு வரவில்லை. வந்தவுடனே வரச்சொல்றேன்னு அம்மா சொல்லச் சொன்னு சார்' என்று சொல்லிக் கொண்டே வந்தான் பையன். அத்தனே உத்தியோகஸ்தர்களிடையே உரக்கப் பேசத் துணிவில்லே அவனுக்கு. சங்கரனுக்கு அப்போது தான் உண்மை உதயமாகத் தொடங்கி யிருந்தது. - -

வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய ஈ சுரவன், நல்ல மழை பிடித்துக் கொண்டவுடன் பாலம் என்னவாகி விடுமோ என்ற கவலையில் அதைக் கவனிப்பதற்காகக் கொட்டுகிற மழையில் மறுபடி இரவில் அந்த இடத்துக்கு வந்திருக்கிருர், தனக்கு நேர்ந்தது' போல் கல்லோ எதுவோ அவரைக் கீழே உருட்டி விட்டது. அவரது கஷ்ட காலம், மேலும் பாறைகள் உருண்டு மேலே விழுந்து விட்டன. 'தன் கடமையைச் செய்யவில்லை’ என்று அவரைச் சொன்னது எத்தனை பெரும் பாதகம்!” - - அன்றுவரை பெருமூச்சு விட்டு அறியாத சங்கரன், நீண்ட தொரு பெருமூச்சு விட்டார். அவர் கண்முன் கடமை வீரராக ஈசுவரன் காட்சி அளித்தது, கண்களில் கண் ணிரை வருவித்துத் திரையிட்டது. எத்தகைய கடமை தவருத ஊழியரை இழந்து விட்டோம் என்று எண்ணியபோது அவருக்கு அநீதி இழைத்து விட்டோமென்ற குறுகுறுப்புடன் துக்கம் பீரிட்டது. ஈசுவரனின் பையன் ஏதுமறியாமல் வெகுளியாகச் சொன்னதை எண்ண எண்ண, அக்குடும்பம் எந்த நிலையில் இருக்கிறதென்று நினைக்க நினேக்க, அவரது உள்ளத்தில் பொங்கிப் புரண்ட துக்கம் வெள்ள மேனப் பெருகியது. ... " - . . . . . . . .

எத்தனையோ திட்டமிட்டு அணைக்கட்டுகளே வெகு சிறப்பாகத் திற்மையுடன் கட்டி முடித்த நிபுணர் சங்கரன் அந்த ஸ்தலத்தில் அந்தக் கணத்தில் தோல்வியைக் கண்டார். அவரது உள்ளத்தில் கொந்தளித்த வேதனைப் பெருக்குக்கும், சோக வெள்ளத்திற்கும், ஒரு அணே போட அவரால் முடியவில்லை. - -