பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து மகேது 烈盖

2

- பதினெட்டு வருஷங்களுக்கு முன் நடந்த செய்தி மீளுட்சியின் மனத்தில் திரைப்படம் போல் நகர்ந்தது. சிங்காநல்லூரில் சுந்தரம் சாதாரண வரும்படி உள்ள ஒரு மிராசுதார். இருக்க வீடும் வருஷாந் தரச் சாப்பாட்டுக்கு நெல்லும் இருந்ததால் கஷ்டம் என்பது இல்லா மல் வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருந்தது. கல்யாணம் ஆன சில மாதங்களுக்குள் பெற்ருேர் காலமாகி விட்டதாலும், உடன்பிறந் தவர்கள் யாரும் இல்லாததாலும் தம் மனிதர்' என்று சொல்லிக் கொள்ள அவருக்கு யாரும் இருக்கவில்லை. தம் ஒன்றுவிட்ட அக் தையின் பெண் மீனுட்சியை அவர் கல்யாணம் செய்துகொண்டிருந்த தால், மீனுட்சியின் தாய் சகாயத்துக்காக அடிக்கடி இவர்களுடன் வந்து தங்குவது உண்டு.

லட்சுமி அம்மாள் குடும்ப விவகாரங்களில் கைதேர்ந்த புள்ளி, அக்கம் பக்கங்களில் கல்யாணமோ கார்த்திகையோ எது நடந்தா லும் அந்த அம்மாளின் யோசனேயும் உதவியும் இல்லாமல் நடக்காது. நல்ல உபகாரி, ஆணுல் தர்க்கம், கட்சி என்று வந்தால், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பதில் அவளுக்கு அவளே நிகர். பாக்கில் அகப்படும் கல்லேப் போலும் பானகத்தில் கிடக்கும் ஈர்க்குப் போலும் சில சமயம் இந்தக் குணம் அவளிடம் தோன்றி, பிறருக்குத் தோல்லே கொடுத்தாலும், மற்றக் குனங்களின் பெருமை அதற்கு மாற்ருக இருந்தது. ‘. . .

மீளுட்சி, தாயின் கைப்பொம்மை. அவளுக்குக் கணவனிடம், அன்பும் பயபக்தியும் இருந்தன. இந்த இரண்டு கரைகளுக்கிடையே அடங்கி ஓடும் ஆருக இருந்தாள் அவள், கரைகளில் எதையும் உடைத்து அந்த ஆறு ப்ெருகியதே இல்லை. தன் அபிப்பிராயம் என்ற ஒன்று, அவளிடம் தனித்துத் தலைதுாக்கியதிே இல்லே. அப்படிநேர்ந்த சந்தர்ப்பங்களும் மிகக் குறைவே. . * - -

கல்யாணமாகி இரண்டு வருஷங்கள் வரையில் குழந்தைகள் பிறக்கவில்லை. அந்த வருஷம் ஆடி அடிாவாசைக்குச் சேது ஸ்நா னம் செய்துவர வேண்டுமென்று லட்சுமி அம்மாள் சொல்லிக்கொண் டிருந்தாள். . .

வைகாசி மாதம் முதல் சுந்தரம் புதிதாக வியாபாரத்தில் இறங் கிளுர், வெல்லம் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்ற உத்தேசத் தால், தாமே நேரில் இருந்து வியாபாரத்தைக் கவனிக்க வேண்டி வந்தது. ஆகையால் ராமேசுவர யாத்திரைக்கு அவர் போக முடியவில்லை. - .

எப்படியாவது பெண்ணேயும் மாப்பிள்ளையையும் அந்த அமா வாசைக்கு ராமேசுவரம் அழைத்துப்போக வேண்டுமென்று லட்சுமி

யம்மாள் துடித்தாள். புறப்படக் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு