பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பாற் கடல்

பறிபோய்விட்டது. நம் நிலைக்கு மீறிய சம்பந்தம் வேறு செய்து விட்டேன். அந்த மனிதர் காதில் சங்கதி எட்டினுல் நான் எப்படிப் பொறுப்பேன்? பச்சைக் கிளி போன்ற நாட்டுப் பெண் இன்னும் வீட்டுக்கே வரவில்லை. இப்பொழுது உன் பிள்ளேயாண்டான் பழ காத கெட்ட பழக்கம் ஒன்று இல்லை.” -

அவர் மேலே சொல்வதற்குள் மீளுட்சி தடுத்து, "ஐயோ! நம் சுப்புவா இப்படிச் செய்கிறவன்? யாரேனும் வயிற்றெரிச்சலுக்குக் கிளப்பி விட்டிருப்பார்கள்' என்ருள், -

"சட், வாயை மூடு ஆறு மாத காலமாக அவன் வீட்டுக்கு வரும் நேரத்தைக் கவனிக்கிருயா? உனக்கு எங்கே பிள்ளேயைத் திருத்தத் தைரிய்ம் வரப்போகிறது? கோயம்புத்துTரில் அவனுக்குத் துஷ்டக் கூட்டாளிகள் பலர் சேர்ந்துவிட்டார்கள். பணத்தைத் தண்ணிர் போலச் செலவழிக்கிருன், இன்று ரெயிலில் வரும்போது அவனேப்பற்றி இரண்டு பெரிய மனிதர்கள் பேசிக்கோண்டு போனதை என் காதசல்ேயே கேட்டேன். இல்லாவிட்டால் நானும் தம்பமாட்டேன். இந்தப் பூனேயும் இந்தப் பாலேக் குடிக்குமா?" என்பதுபோல் நம்மிடம் நடத்துகொள்கிருன், நான் செய்த பாவம்'

மீளுட்சி இத்தனே நேரம் துக்கத்தை அடக்கி வைத்திருந்தவள், குழந்தைபோல் அழுதுவிட்டாள். சுந்தரத்தின் கால்களைப் பிடித்துக் கொண்டு, 'எப்படியாவது அவனே இந்தப் படுகுழியிலிருந்து மீட்க முயல்வோம். நீங்களே இப்படித் தளர்ந்துவிட்டால் நான் எப்படிப் பொறுப்பேன்?' என்று அவரைத் தேற்றப் பார்த்தாள்.

- 4. அன்று இரவு வீட்டுக்கு வந்த சுப்பு பெற்றேரின் சோகத்தைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ இவர்களுக்குச் செய்தி எட்டி விட்டது என்பதைப் புரிந்துகொண்டான். சுபாவத்தில் தைரியம் இல்லாதவன் ஆகையால் வரப்போகும் புயலே எப்படிச் சமாளிப்பு:

தென்று கவலைப்பட்டான்.

கடைசியில் துணிந்து கேட்டவள் மீனுட்சிதான். 'ஏண்டா

சுப்பு, ஊரில் உன்னப்பற்றி ஏதேதோ புகார் சொல்லுகிருர்களே.

அவையெல்லாம் நிஜந்தானுடா? நாங்கள் உன்னே மார்பிலும் தோளிலும் அருமையாகச் சுமந்து வளர்த்ததற்கு இதுதான பலன் அப்பாவுக்கு நீ ஒழுங்காக இருக்கிருய் என்பது தெரியாவிட்டால், அவர் உயிரையே விட்டுவிடுவார். அவர் பக்கத்தில் உட்கார்த்து, சமாதானமாக ஒரு வார்த்தை சொல்லடா" என்று பொரிந்து தள்ளி விட்டான். - - - - - -

அவளுடைய இந்த எதிர்ப்பு, மின்னலும் இடியும் சேர்ந்த மழை போல் சுப்புவின் மனத்தைத் தாக்கியது. 'அம்மா, நான் தப்பு வழி 2யில் போகமாட்டேன், அம்மா. ஏதோ டிராமா, சர்க்கஸ் என்று