பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூமகேது 15

சிநேகிதர்களுடன் போளுல் யாரோ கதை கட்டிவிட்டிருகிருச்கள். இனிமேல் பார், தினந்தோறும் நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடு கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தகப்பனுரைப் பார்க்கப் போளுன். . . . -

அவரை நிலைகுலைந்த கோலத்தில் பார்த்ததும் அவனுக்கு அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. அவர் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, "அப்பா, அப்பா, நான் தெரியாத்தனமாகத் தவறு செய்துவிட்டேன். இனிமேல் தப்புத் தண்டாவுக்கே போக மாட்டேன்’ என்று அழுதான்.

சுந்தரம் சற்றுத் தெளிந்தாற்போல் காணப்பட்டார். 'அழுகிற ஆளேயும் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே' என்கிறது பழம்ொழி. அது பொய்யாகுமா? பி. ஏ. பரீட்சையில் சுப்பு கோட்டை விட்டு விட்டான். பழைய நண்பர்களின் தொடர்பு மறுபடியும் உறுதியாகப் பிடித்துக் கொண்டது. இப்பொழுது அவன் வீட்டுக்கு இரவு நேரம் முழுவதுமே ஒவ்வொரு நாள் வரமாட்டான். f - சுந்தரம் அவமானத்தாலும் ஏக்கத்தாலும் குன்றிப் போய்விட் டார். மதுரைக்குத் தந்தி கொடுத்துச் சம்பந்தியைத் தருவித்தார். குப்புசாமி ஐயர் வந்தார். அவரைக் கண்டதும் சுந்தரம் ஹோவென்று கதறி விட்டார். 'அத்தி பூத்தாற்போல் ஒரு பிள்ளே, லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்தைப் பொறுப்புடன் கட்டியாளத் தகுந்தவன், அறிவாளி என்றெல்லாம் மனக்கோட்டை கட்டினேன். குப்பிண்ணு, என் எண்ணத்தில் மண் விழுந்தது. உமது குடும்பத் துக்கும் தாங்க முடியாத துக்கம். நான் என்ன செய்வேன்!” என்று: புலம்பிளுர், - -

குப்பண்ணு மலேபோன்ற உறுதி உடையவர். 'மனத்தை அலட்டிக்கொள்ளாதீர்கள். உலகத்தில் இதெல்லாம் சகஜம். நம் சுப்பு மறுபடி திருந்தக்கூடாதா? நாம் பதற்றப்படாமல் நிதானமாக இருந்து திருத்திவிடலாம், தைரியமாக இருங்கள்’’ என்று சமச தானம் சொல்லிவிட்டுப் போளுர். -

ஐந்தாறு மாதங்கள் ஓடிவிட்டன. சுந்தரம் பாயோடு படுத்து விட்டார். பிள்ளேயின் குணம் திருந்தாது என்ற கவலையால் அவரை இருதய நோய் பற்றிக்கொண்டது. திடீரென்று ஒரு நாள் உயிரை விட்டார். சுந்தரத்துக்கு உடம்பு ஜாஸ்தியாக இருந்தபோதுகூடம் பிள்ளேயாண்டான் வீட்டில் இல்லை. அவனைத் தேடிப் பிடிக்க ஆள் அனுப்ப வேண்டியிருந்தது. - -

ஈமக்கடன்கள் முடிந்தபின் சொத்துக்களின் நிலவரத்தைப் பார்வையிட்டார் சம்பந்தி. ஆறு மாதத்துக்குள் இருபத்தையாயிரம்

ரொக்கமாகச் சுப்புவால் கரைந்திருந்தது. -

சுந்தரம் சாகுமுன் குப்பண்ணுவும் சுந்தரமும் சேர்ந்து, மிகுந்த குடும்பச் சொத்துக்களே அவன் விற்கவோ கடன் வாங்கவோ முடி யாதபடி மீளுட்சியின் பேரில் எழுதி வைத்திருந்தார்கள். -