பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாற் கடல்

வெல்லம் இல்லாத இடத்தில் ஈக்களுக்கு வேலை ஏது? புதிய நண்பர்கள் சுப்புவை விட்டு விலகிஞ்ர்கள். சுப்புவும் மீளுட்சியும் கொஞ்ச காலம் ஊரைவிட்ட்ே வில்கியிருப்பது நன்மை என்று தினேத்த குப்பன்.ண்ணு, அவர்களே மதுரைக்கு அழைத்துப் போளுர்.

மீளுட்சிக்கு எதுவுமே பிடிக்கவில்லை. அவள் உடல் நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. அவளுக்கு இனிப் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை. குப்பண்ணுவிடம் பேச்சுவாக்கில் தான் அடுத்த வாரம் சிங்காநல்லூருக்குப்புறப்படப் போவதாகச் சொன்குள், அவர் அவளைத் தடுத்துப் பார்த்தார். அவள் சம்மதிக்கவில்லை. பிறகு பெண் சரஸ்வதியையும் மாப்பிள்ளையையும் சேர்த்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.

5

சரஸ்வதி மிக நல்ல பெண். சுபாவத்திலேயே அன்பும் அடக்கமும் நிறைந்த அவள், தன் மாமியாருடைய மன நிலைக்கு மிகவும் இரங்கி, அவள் மனம் கோணுமல் நடந்து வந்தாள். மீனுட்சியின் விடிவில்லாத கஷ்டத்துக்கு அவள் விடிவெள்ளிபோல் அமைந்தாள். மீளுட்சி சரஸ்வதியைப் பார்த்துச் சில சமயங்களில், "அம்மா, நீ சிறு பெண். என் கஷ்டத்தை நீக்கிவிடலாமென்று. நினைக்கிருய், நான் மகா பாவி. என்னேப்பற்றி நினைக்காதே. உன் அகமுடையானுக்கு வேண்டியதைச் செய். காலேஜில் அவன் முதல், மூன்று வருஷம் படித்த மாதிரியில் ஐ. ஸி. எஸ்.ஸ்"க்குக் கூட. அவனே அனுப்ப நினைத்தோம். நம் அதிருஷ்டந்தான், அவன் புத்தி குறுக்கே பாய்ந்தது. வெறும் பி. ஏ. என்ற வாலைக்கூட ஒட்டிக் கொள்ள முடியாமல் போய்விட்டது. படிப்புப் போளுல் போகிறது. இருப்பதை வைத்துக் கொண்டு நாலு தலைமுறைக்குத் தள்ளலாம். ஆளுல் வேலையில்லாத அவன் இள மனசு எண்ணுத எண்ண மெல்லாம் எண்ணி, எப்படி வருந்துகிறதோ! நீ மட்டும் அவன் மனம் நோகும்படி ஒன்றும் சொல்லாதே. நீங்கள் இருவரு மாவது சந்தோஷமாக இருந்தால்தான் என் குடும்பம் விளங்கும்’ என்று அடிக்கடி சொல்வாள். -

சரஸ்வதி, "சரி, சரி” என்று கேட்பாள். அவளுக்கு ஒன்றும் சரியாகப் புரியாது. அவள் கணவன் முன்போல் ஊதாரியாகத் திரிந்து ஊர் சுற்றவில்லை. தகப்பனுர் இறந்து, தாய் சோகமே உருவாக மெலிந்து உருகுவதைக் கண்டதும் அவன் அடியோடு: மாறிவிட்டான். சரஸ்வதியின் ஏக்கம் தேங்கிய விழிகள் அவனைப் புனிதமாக்கிவிட்டன. வீண் பொழுது போக்குவதுதான் அவளுல் சகிக்க முடியாமல் இருந்தது. அவன் மனசுக்கு ஓயாத வேலை;

- கொடுக்க, மற்ருெரு துன்பத் தொடர் சூழ்ந்தது. .