பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூமகேது 17

மீனுட்சியின் உடம்பு இளைத்ததோடு இருமலும் ஆரம்பித்தது. அவள் வைத்தியம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள். நான் செய்த பாவத்தை நானே அநுபவித்துவிடுகிறேன். அதற்கு மாற்றுத் தேட வேண்டாம்' என்று சொல்லி வந்து, கடைசியில் படுத்த படுக்கையாகி விட்டாள். - -

சரஸ்வதிக்குத் திகில் பிடித்துக் கொண்டது. சுப்புவிடம் சொல்லி டாக்டரைத் தருவித்து, மாமியாரைப் பரீட்சிக்கச்செய்தாள். டாக்டர் உள்ளே நுழைந்ததுமே மீனுட்சியின் உடம்பைக் கண்டு பிரமித்து நின்று விட்டார். பரீட்சித்துவிட்டு, ஏதேதோ மருந்து சொன்ஞர். வெளியே போகும்போது, சுப்புவை அழைத்துக் கொண்டு போய், "உங்கள் தாயாருக்கு கூடியம் வந்து முற்றிவிட்டது. அதோடு இருதயமும் பலவீனமாக இருக்கிறது. ஏதோ மன நோய் பீடிப்பதால்தான், அபாயமான திலக்கு உடல் வந்துவிட்டது” என்று சொன்னர். - : -

சுப்பு பேசவே இல்லை. கற்சிலை போல் நின்று விட்டான். அவன் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது. டாக்டர் அநுதாபத்துடன், "கவலைப்படாதீர்கள். அந்த அம்மாள் மனசில் இருப்பதை அறிந்து, கவலையை நீக்கினல் ஒரு வேளை குணமாகலாம்” என்ருர்.

"நான் செய்த பாவம்' என்று அவன் வாய் முணுமுணுத்தது.

டாக்டர் சொன்ன மருந்துகளை வாங்கவே விடவில்லே மீளுட்சி, "அம்மா, நான் சிறு பிள்ளைத்தனமாக ஏதோ தவறி நடந்து விட்டேன். அதற்காக நீ உன்னேயும் வருத்திக் கொண்டு என்னேயும் வருத்துகிருய். பாட்டியும் அப்பாவும் போன் துக்கம் தீருமுன் நீயும் எங்களே நிராதரவாக விட்டுப் போகுல் நாங்கள் தாங்குவது எப்படி? நான் இப்பொழுது ஒழுங்காக இருக்கவில்லையா? மருந்து சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்” என்று சுப்பு கெஞ்சிஞன்.

"இனிமேல் மருந்து எதற்கப்பா?" என்று மழுப்பிளுள் மீனுட்சி. . ; -

ஒருநாள் விடியற்கால ஐந்து மணி இருக்கும். சிரமப்பட்டு இருமிய மீனுட்சி, ரத்தம் கக்கினுள். சுப்புவைப் பக்கத்தில் அழைத் தாள். அப்பா குழந்தை, நான் இனிப் பிழைக்க மாட்டேன். இந்தா, அழாதே. நான் சொல்வதைக் கவனமாகக் கேள். அதற்குப் பரிகாரம் தேடிகுல்தான் நம் குடும்பம் சீர்ப்படும்; என் ஆத்மா சாத்தி அடையும். இதோ பெட்டி, கவர். நான் போன பிறகு இந்தக் கவரில் இருக்கும் கடிதத்தை நீ படித்துவிட்டு, அதில் காணப்படும் பாகீரதியைப் பற்றிக் கல்லிடைக்குறிச்சியில் விசாரி. அவளே நீ எப்படியாவது கண்டு பிடித்து, அவளிடம் கடிதத்தையும் பெட்டியையும் சேர்த்து விடு' என்று சொல்லி ஒரு கவரையும் பெட்டியையும் அவனிடம் கொடுத்தாள். பிறகு சரஸ்வதியையும் அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டாள். "நான் செய்த பாவம்; நான் உன்ன

- اسمه وبية . . .