பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 பாம் கடல்

வரையில் உங்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. நான் அளவுக்கு மேல் கஷ்டத்தை அநுபவித்து விட்டேன். கவலைப்படாதீர்கள். நீங்கள் ஆயிரம் காலம் குழந்தை குட்டிகளோடு செளக்கியமாக இருப்பீர்கள்' என்று ஆசீர்வதித்தாள். "அம்பிகே, அம்பிகே’ என்ற தியானத்தோடு அவள் உயிர் பிரிந்தது.

6

டி மாதம்; வெள்ளிக்கிழிமை. ராமேசுவரம் கோயிலில்

உத்ஸவம் நடக்கிறது. ராமேசுவரம் புதுத் தெருவில் ஒரு சத்திரம். அதன் ஒரு பகுதியில் இறங்கியிருந்த டாக்டர் ராமநாதனை ஓர் ஆசாமி தேடி வந்தான். டாக்டர் அவனே வரவேற்று, உட்கார வைத்தார். - - -

“உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் யார்?’ என்று டாக்டர் கேட்டார். -

“சற்றுத் தனியாகப் பேச முடியுமா?’ என்ருன் புது ஆசாமி.

"அதற்கென்ன? இங்கேயே பேசலாம். என் தாயார்தான் இவர்கள். சங்கோசமில்லாமல் சொல்லுங்கள்.”

முதலில் சற்றுத் தயங்கிய புதியவன் பிறகு தைரியப்படுத்திக் கொண்டு, 'நான் இருப்பது கோயம்புத்துாருக்குப் பக்கத்திலுள்ள சிங்காநல்லூர். என் பெயர் சுப்பிரமணியம். நானும் என் மனைவியும் உங்கள் தாயாரைத்தான் தேடி வந்தோம். பழக்கம் இல்லாத ஒரு மனிதர் உங்களைத் தேடி வந்து அடைக்கலம் புகுந்தால் காப்பாற்று வீர்களா? முன்பின் தெரியாத என்னே வரவேற்றுப் பேச அநுமதித்த உங்களிடம் விஷயத்தைச் சொல்லவே நா எழவில்லை. இந்தக் கடிதம்........” என்ருன். to , - “ஒன்றும் புரியவில்லையே! இப்படிக் கொடும், உட்காரும்” என்று சொன்ன டாக்டர் அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரித்தார். கடிதத்தில் அவருடைய தாயின் பெயர் இருந்தது. கவரைத் திருப்பிப் பார்த் தார். அதன் மேலும் அவள் பெயரே இருந்தது.

"அம்மா” என்று கூப்பிட்டு, "இது உனக்கு எழுதிய கடிதம். இந்தா அம்மா’ என்ருர் டாக்டர். >

"நீதான் படியேண்டா கேட்கிறேன்” என்ருள் அம்மா.

டாக்டர் கடிதத்தைப் படித்தார் :

- சிங்கா நல்லூர்

24 - ஜூன், 1954

சகோதரி பாகீரதிக்கு நமஸ்காரம். நான் யார், ஏன் உனக்கு இத்தக் கடிதம் எழுதுகிறேன் என்பவை படிக்கப் படிக்கத் தெரியும்.