பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரமகேது 19

இருபத்தாறு வருஷங்களுக்குமுன் தனுஷ்கோடிக்கு ஆடி அமாவாசை ஸ்தானத்துக்கு வந்தது உனக்கு நினைவு இருக்கிறதா? நினைவில்லா மல் எப்படி மறக்கும்! எனக்கு அந்த நினைவு அப்பொழுது அதிகமாக இல்லை. சென்ற ஏழெட்டு வருஷங்களுக்குள் அந்தச் சம்பவத்தை நெருப்புத் துண்டத்தைக் கொண்டு என் நெஞ்சில் எழுதி விட்டது விதி. ஆடி அமாவாசை, வெள்ளிக் கிழமையுங்கடிட! விடியற்காலை. தனுஷ்கோடியில் ஸ்நான கட்டத்துக்கு நானும் என் தாயும் வந்து கொண்டிருந்தோம். உம், எப்படி எழுதுவேன்! எழுதாவிட்டால் என் மனம் சாந்தி அடையாது. என் காலில் ஏதோ கனமான பொருள் தட்டுப்பட்டது. குனிந்து எடுத்தேன். திருமங் கல்யமும் மோகராக்களும் கோத்த நாயுருவிக் கொடி. அன்று அந்த விநாடியில் அது நெருப்பாகத்தான் என் கண்ணுக்குப் பட்டது. . - -

"அம்மா!” என்றேன். பிரமிப்பால் பேச்சு வரவில்லை, என் தாய் மிக மிகச் சூட்சும புத்தி உள்ளவள். உடனே அதைப் பார்த் தாள். அப்படியே அதைக் கையில் இருந்த சவுக்கத்தில் சுற்றி வைத்துக்கொண்டு, “பேசாதே" என்று ஜாடை காட்டினுள்.

எங்களைத் தாண்டிக்கொண்டு வட நாட்டுக் கோசாயிக்கூட்டம் ஒன்று போயிற்று, “யாருடையதோ? பாவம்!” என்றேன்.

என் தாய், "யாரோ ஆயிரம் பேர்! சந்தையில் கிடைத்த பொருளே எல்லாருமே என்னுடையது' என்றுதான் சொல்லுவார்கள். உடைமைக்காரியை நீ தேடிப் பிடிக்கப் போகிருயா? நாம் ஒருவர் வீட்டில் கன்னம் வைக்கவில்லை; தாளுகக் காலில் தட்டுப்பட்டது. வலிய வந்த சீதேவியை வெள்ளிக்கிழமையும் தானுமாக உதறித் தள்ளாதே; வாயை மூடிக்கொண்டிரு” என்று என்னே அடக்கி விட்டாள். - '. - -

ஸ்நானம் நூற்றெட்டு முடிந்து திரும்பும் வரையில் கொடி தழுவியதை நீ கவனிக்கவில்லையாம். அதற்குள் நாங்கள் சாதாரண

மாக ஸ்நானத்தை முடித்துக்கொண்டு திரும்பி விட்டோம். .

சமுத்திரக் கரையில் உன் மாமியாரும் கணவனும் உன்னே வாயில் வந்தபடி வைதார்களாம். கறை யெல்லாம் சல்லடை போட்டுச் சலித்தார்களாம். இருந்தால்தானே அகப்படும்? நகை யையும் பறி கொடுத்து, மாமியாரிடமும் கணவனிடமும் வசவு வாங்கிக் கொண்டு தவித்த அப்பாவியாகிய உன்னேக் கண்டு இரங்கிய சிலர், உனக்குப் பின்னுல் நாங்கள்தாம் வந்தோம் என்று சொன்னதால் நாங்கள் இறங்கியிருந்த சத்திரத்துக்கு நீயும் உன் கணவனும் மாமியாரும் வந்து எங்களிடம், "கொடியைப் பார்த்தீர் களா?" என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு, "நீங்கள்தாம் எங்களே அடுத்து வந்தீர்கள். தயவு செய்து கொடுத்து விடுங்கள்” என்று கேட்டீர்கள். . • * . .