பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பாற் கடல்

மாமியாகுக்குப் பின் கண்ணிரும் கம்பலையுமாக நின்ற நீ, 'ஆடி வெள்ளிக்கிழமை; ஒரு திருமங்கல்யத்தையாவது கொடுத்து விடுங்கள்!” என்று பரிதாபமாகக் கேட்டாய்,

உன் முகத்தில் தோன்றிய சோகம், உள்ளதைச் சொல்லிவிட வேண்டும். கொடுத்துவிட வேண்டும்” என்று என்னேத் தூண்டியது. என் உள்ளம் தவித்தது.

ஆளுல் அம்மா அதற்குள் பெட்டி பேழை எல்லாவற்றையும் உதறிக் காட்டி விட்டாள். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. எங்கும் கொடி இல்லை. நீங்கள் போய் விட்டீர்கள். இல்லை என்ற பின் அதைச் சாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட அம்மா, பழைய தலையணையைத் துளைத்து அதை அதில் செருகியிருந்தாள். தையல்கூடப் போடவில்லை. ஊருக்கு வந்தபின் அதை எடுத்து அவள் காண்பித்தபோதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது.

நான் என்ன என்னவோ சொன்னேன். "போடி, கொடுத்தால் உடனே கூப்பிட்டுக் கொடுத்திருக்க வேண்டும். இனிமேல் சொன்னுல் சிறைவாசந்தான் கிடைக்கும்” என்ருள், உடனே நான் கம்மென்று இருந்துவிட்டேன். - நாளடைவில் அதை ஒரு வகையாக மறந்தே விட்டேன்: அல்லது மறந்ததாகப் பாவித்தேன். ஊரார் பொருள் தூமகேது என்பதை நான் அநுபவத்தில் அறிந்தேன். உன் நகையைத் தயவு செய்து பெற்றுக்கொள். அதைப் பழைய உருவில் கொடியாகவே வைத்திருக்கிறேன். அதை அழித்துச் சங்கிலியாகப் பண்ணி, நான் கழுத்தில் அணிந்தது முதல் என் குடியையே அது பழி வாங்கி விட்டது! - - -

நான் பதினேந்து வயசு அறியாச் சிறுமியாக இருந்தபோது செய்த குற்றத்தைப் பெரிய மனசு செய்து, நான் பட்ட கஷ்டங் களுக்கு இரங்கியாவது மன்னித்துவிடு. என் ஒரே குழந்தை பாகிய இவனுக்கு உன் ஆசீர்வாதந்தான் வாழ்வு தர வேண்டும். - . - . . . . . .

உன் மன்னிப்பைக் கோரும், மீனுட்சி.

இதை டாக்டர் ராமநாதன் படித்தபோது, வைத்த கண் வாங்கா மல் திறந்த வாய் திறந்தபடியே அவர் தாய் பாகீரதி நின்றவள் நின்றவள்தான் கடிதத்தைப் படித்து முடித்ததும் ஒரு நீண்ட பெரு மூச்சு அவளிடமிருந்து வெளிவந்தது. கண்களில் நீர் நிறைந்து வழிந்தது. கண்ணிர் வழியச் சோகமே உருவாக உட்கார்ந்திருந்த சுப்பு, திடீரென்று எழுந்து பாகீரதியம்மாளின் காலில் விழுந்து அவள் காலே இறுகப் பிடித்துக்கொண்டு கேவு கேவென்று கேவிஞன். ஒன்றும் புரியாமல் குழம்பிய ராமநாதன் அவர்கள் இருவரையும் பார்த்தவண்ணம் பேச்சற்று நின்றிருந்தார்,