பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி - 35

இரவு வைத்த வைக்கோல் அப்படியே இருந்தது. கண் இமைகளில் ஈரம் படிந்து, கன்னத்தில் ஈரக்கோடும் விழுந்திருந்தது. கிழவர் வாலேத் தூக்கிப் பார்த்தார். மாசு தொங்கிவிட்டது. தீர்மானம் செய்துவிட்டார் கிழவர். - :

மறுகணம் எக்களிப்போடு சம்முகம், சம்முகம்' என்று கத்திஞர். பதிலில்லே. குரலில் பதற்றம். மேற்கொண்டு என்ன செய்யவேண்டு மென்பதும் தட்டுப்படவில்லை. நின்ற இடத்திலிருந்து தன்னுணர் வில்லாமல் முன்னும் பின்னும் சென்ருர். - -

கயிற்றில் தொங்கிய லாந்தரை அவிழ்த்துக்கொண்டு ஒட்டு மாவைச் சுற்றி நெற்குத்துச் சாவடிக்கு நகர்ந்தார். -

சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவர் ஹேஷ்யம் பலிக்கப் போகிறது. அமாவாசை தாண்டாது என்பது அவருடைய கணிப்பு. நோவு எடுத்துவிட்டதே. மாதக் கடைசிவரை இழுக்கும் என்ருன் சம்முகம். அவனுக்கு என்ன தெரியும்? வஜ்ர மட்ையன். - கிழவர் அடிவைக்க வைக்க, வலது புறத்தில் கிணற்றடியும், கம்பி வலைபோட்ட அடுக்களையும், ஸ்ளுண அறைக்குப் பின்ளுல் நின்ற ஐந்தாறு தென்னம்பிள்ளேகளும் விளக்கொளியில் புலப்பட்டன. கொட்டகையின் ஒரு பக்கம்தான் சுவர். நாலு தூண்கள் மேல் எழுப்பிய கூரை தான் அது. ஒரு மூலையில் பிரம்மாண்டமான கல் யான ஆட்டுக் கல், யானைக்குட்டி படுத்திருப்பது போலிருந்தது. மறுபக்கம் கூரையில் முட்டும்படி விறகு அட்டி. தட்டு முட்டு சாமான்கள். பின்புறம் சுவரையொட்டி நா8லந்து அடுப்புக்கள். ந்ெல்லப் போட்டுக் குத்துவதற்குக் கொட்டகையின் நடுவில் அடுப் புக்கு முன்புறம் சம சதுரமான கல்லைத் தரையோடு தரையாய் பதித் திருந்தது. கிழவர் விளக்கைத் தூக்கிப் பார்த்தார். கருங்கல்லில் தேங்காப்பூ டவல் விரித்தபடி யிருந்தது. டவலில் முதுகு அழுத்தத் தின் சுவடும் தெரிந்தது. அடுப்பின் மேல் சாய்வாக வைத்திருந்த பலகையில் த8ல எண்ணெய் படிந்து, உள்ளங்கை அகலத்துக்குக் கறுப்பு அடையாய் அப்பியிருந்தது. -

சம்முகத்தைக் காணவில்லை!

கிழவருக்கு ஏமாற்றமும் கோபமுமாக வந்தது. என்ன இது? மாட்டுக்கு வலியெடுத்துவிட்டது. எங்கே தொலைந்து போனன், மடசாம்பிராணி, மனத்துள் திட்டி நொறுக்கினர். கோபத்தை நேரில் காட்ட முடியுமா? திரும்பக் காட்டி விடுவான். ஆளுல் சபேசய்யர் வருகிருர் என்ருலோ அரையோடு நீரைக் கழித்துவிடுவான். நர்ஸை வீடுகொண்டு போய்ச் சேர்க்கப் போனவன் அப்படியே தொலைந் போயிருப்பாளுே? - -

சம்முகத்தை எழுப்பி, தனது ஹேஷ்ய சூட்சமத்தையும், பிரதா பத்தையும் ஒரு பாட்டம் பாட எண்ணியவர் ஏமாந்து அடுக்களைப் பக்கம் சென்ருர். - - -