பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - பாம் கடல்

வரை விரிந்தது. மேல் இரண்டு பற்கள் இல்லாத அதே இடத்தில், கீழ் வரிசையிலும் இரண்டு பற்கள் இல்லை கிழவருக்கு. அவர் சிரிக்கிறபொழுது மேலும் கீழுமாக இடைவெளியைப் பார்ப் தில் ஏற்படும் அனுபூதியை அனுபவித்தவர்கள், அத்தகைய தருணத் திற்காகக் காத்திருந்து வாய்க்கிறபொழுது வீளுக்கமாட்டார்கள். கோமதி கிழவருடைய வாயைப் பார்த்துக்கொண்டிருந்தாள். - குழந்தையைப் பக்கத்தில் போட்டாள் மாமி. மார்பிலும். கையிடுக்கிலுமாகப் புதைந்தது குழந்தை; அழுகையும் அவரோ கணத்தில் தேய்ந்தது. - x

தன்னுடைய பேச்சை ஓரளவேனும் செவி கொடுத்துக் கேட்கும் கோமதியும் அவள் அப்பாவைப் போலாகிவிட்டாளா என்ன! கிழவர் நம்பிக்கை யிழக்காமல் மீண்டும் சொன்னர்.

'பசுவுக்கு வலியெடுத்திருக்கு, இந்தத் தடவையாவது கிடாரி பிறக்குமின்னு நினைக்கிறேன்.”

பதில் பேசவில்லை கோமதி. கிழவருக்கு ஒரே ஏமாற்றம். இரண்டு பக்கமும் திரும்பித் திரும் பிப் பார்த்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து, “ஒரு மட்டும் செத்துப் பிழைத்தாய்!” என்ருர்,

"பிழைத்திருக்க வேண்டாம்” என்ருள் கோமதி. உள்ளங்கால் வழி மின்சாரம் பாய்ந்து உடம்போடு தலை வரை ஒடியது கிழவருக்கு. -

“ஏண்டி பெண்ணே இப்படிப் பேசறே?” என்சூர் கிழவர். கோமதியின் கன்னத்தில் கண்ணிர் வழிந்தது. கிழவருக்கு விஷயம் மங்கலாகப் புரிய ஆரம்பித்தது. "அழாதே, ஈச்வர சங்கல்பம்" என்று சொல்லிக்கொண்டே மெதுவாக சன்ன8லச் சாத்தியவர் மீண்டும் திறந்து, “பசு கன்னு போட்டதும் வந்து சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். *

அப்பொழுது நடு. ஹாலில் அலாரம் அடிப்பதும் அதைத் தொடர்ந்து, "யாரது அங்கே? என்ன சத்தம்?" என்று சபேசய்யர் அதட்டும் குரலும் கேட்டன. -

"தாத்தாதான் அப்பா” என்ருள் கோமதி. அதற்குமேல் அங்கு

திற்காமல் மட மடவென்று பின் வாங்கினர் கிழவர். ".

தரை வெளுக்க ஆரம்பித்து விட்டது. கிழக்கிலிருந்து கிரணங் கள் தங்க ஊசிகள் போல் காம்ப்ெளண்டுச் சுவரைத் தாண்டி கோய்யா மரத்தில் விழுந்துகொண்டிருந்தன. - -