பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடா + 29

கிழவர் தேன் கூடு பக்கம் வந்ததும் மீண்டும் தலையைத் துாக்கிப் பார்த்தார். அப்பொழுதும் சாளரக்கதவு சாத்தியிருந்தது.

"குஞ்சம்மா, குஞ்சம்மா” என்று கூப்பிட்டார் கிழவர். தாழ்ப்பாளைத் தட்டும் ஒசை. சாளரக்கதவு நிறந்தது. குஞ்சம் மாள் தலையை வெளியே நீட்டிகுள். - -

குஞ்சம்மாள் பல வருடங்களாக மாடியில்தான் அடைத்துக் கிடந்தான், டி. பி. என்று டாக்டர்கள் சொன் ஞர்கள். ஆளுல் கிழவர் இருமல் என்றுதான் சொல்லுவார். வீட்டுக்கு வருகிறவர், களிடமெல்லாம் என் மனைவிக்கு டி. பி., என் மனைவிக்கு டி. பி, என்று சபேசய்யர் சொல்லுவது கிழவருக்குப் பிடிக்காது. ‘என் பெண் னுக்கு இருமல் என்று தான் அவர் சொல்லுவார். சபேசய்யரும் அப்படிச் சொன்குல் போதுமென்பது கிழவருடைய அபிப்பிராயம். இதை வியாஜமாக வைத்தே மாமனுருக்கும், மாப்பிள்ளைக்கும் லடாய் மூளும், -

சபேசய்யரின் மருத்துவ ஞானம் குஞ்சம்மாளே மாடியில் ஒதுக் கித் தள்ளிவிட்டது. வியாதிக்காரியோலா இருப்பாள் குஞ்சம்மாள்? ஜம்பர் கை நுனியில் சதை பிதுங்கும். யாரரவது பார்த்தால் 'மாரா சி. உடல் அசையாமல் தின்று கொழுத்திருக்கிருள்’ என்பார்கள். சீவி முடிந்த தலை, நிறைய ஜரிகை போட்ட காஞ்சீபுரம் பட்டுச் சேலை. வைர மூக்கித்தியையும் தோட்டையும் அடிக்கடி கழற்றித் துடைத் துக்கொண்டிருப்பாள். உடம்பு காகித வெளுப்பு. சில சமயம் வறட்டு இருமல் கிளம்பிவிட்டதென்ருல், சிரட்டையைப் பாறைமேல் தேய்ப் பதுமாதிரி சொர சொரவென்று இருமித் தள்ளிவிடும். குளிமுறை யன்று மட்டும் கீழே வருவாள். வாரத்தில் ஒரு நாள் ஸ்னைம். குளித்துவிட்டு மாலைவரை கீழே உட் கார்ந்து கொண்டிருப்பாள். அப்பாவுடைய மாட்டுப் பைத்தியம் பெண்ணுக்கும் சிறிதுண்டு. மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்து துளசி மாடம் பக்கம் நிறுத்திக் காட்டுவார்கள். மாலையில் மீண்டும் மாடிக்குள் புகுந்துவிடுவாள் குஞ்சம்மா. .

விடியற்காலம் ஆறரை மணிக்குக் கிழக்கு வெயிலடிக்கையில், ஏற்றிய லாந்தருடன் அப்பா நிற்பதை விழிபிதுங்கப் பார்த்தாள் குஞ்சம்மா, -

"இதென்ன கோலம் அப்பா?” "குஞ்சம்மா, விசேஷம் தெரியுமோ?” “என்னப்பா, என்ன விஷயம்?” - х . “பசுவுக்கு நோவெடுத்திருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் கன்னுபோடும்.” - "அப்பா, கோமதிக்குத் திரும்பவும் பெண் குழந்தைதான பிறக் கணும். நமக்கு ஏன் இந்த சோதனை?” ஆற்ருமை தொனித்தது குஞ்சம்மா குரலில். - - -