பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி 3 #

"குஞ்சம்மா, வருத்தப்படாதே. எல்லாம் ஈச்வர சங்கல்பம்; இதெல்லாம் நம்ம கையிலெ இல்லை. அவன் பிறக்கணும்னு நெனக்கறது தான் பிறக்கும். இப்பொ நான் கிடாரி பிறக்கும்னு சொல்றேன். நான் சொல்றேங்கறதுக்காக பிறந்துடாது. அவன் நினைக்கணும். ஆளு. அவன் இந்தத்தவா கிடாரி பிறக்கும்படி யாத்தான் நினைப்பாங்கற நம்பிக்கை இருக்கு எனக்கு. எப்டினு கேப்பே? பதில் கிடையாது. நம்பிக்கை; அவ்வளவுதான்...”

கிழவர் பேசிக்கொண்டே போளுர். - குஞ்சம்மா தலையை இழுத்துக்கொண்டு விட்டாள். தொழுவத்தில் மாடு அலறும் ஓசை கேட்டது. கிழவர் வேகமாக முன்னேறும் பாவனையுடன் தொழுவத்தை நோக்கி நகர்ந்தார்.

கிழவர் தொழுவத்துக்கு வருகிற பொழுது சம்முகம் பாலக் கறந்து கொண்டிருந்தான். -

லாந்தரை அணைத்துக் கயிற்றில் கட்டிக்கொண்டே, "ஏய் சம்முகம், ராத்திரிப் பூரா இருமல் கேட்டுதே, பனிலெ சளி புடிச்சுண் டிருக் கோடா?” என்று கேட்டுக்கொண்டே அடக்க முடியாமல் சிரித்தார். சம்முகம், கிழவர் வாயைப் பார்த்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டான். -

"நர்ஸம்மாவை கொண்டு போய் வீட்டிலே தள்ளிப்போட்டு அப்படியே சுசீந்தரத்தைப் பார்த்து நடையைக் கட்டினேன். நேத்து ரிஷப வாகனமில்லா. பெரிய வாசிப்பு” என்ருன் சம்முகம்.

கிழவர் அவன் பக்கத்தில் வந்து கண்களில் விஷமம் பொங்க, "ஏய் சம்முகம், கீப்" ஏதாவது வச்சிருக்கியோ "கீப்"?” என்ருர்.

போங்க சாமி” என்று சிரித்தான் சம்முகம். - கிழவர் திடீரென்று குரலே ஏற்றிக்கொண்டு, “டேய், ஆனைமடையா, வஜ்ரசும்பா, இருளடிச்சுப் போச்சோடா உன் கண்ணிலெ” என்று கத்தினர். -

குரலில் மிடுக்கு, போலித்தனம். ير - பால் செம்பைப் பதனமாக் மூலையில் வைத்துவிட்டுக் கண்கள் விரிய இமைக்காமல் கிழவரைப் பார்த்தான் சம்முகம்.

“அட சாம்பிரணி மடையா” என்று கத்தினர் கிழவர். சம்முகத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. தலையைச் சாய்த்துக் கொண்டு, பிடரியைச் சொறிந்தபடி எதையாவது மறந்து போளுேமா என்று யோசித்தான். - -

“விரிசம் பழம், விரிசம் பழம்” என்று சொல்லிக்கொண்டே சினேமாடுக்குப் பக்கத்தில் சென்று நின்றுகொண்டு, “இங்கே வா” என்று கூப்பிட்டார்.