பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாற் கடல்

8ു வந்தான்.

  • குருட்டுக் கண்ன்ெனத் திறந்து பாரு” என்ருர் கிழவர்.

சம்முகம் இரண்டு நிமிஷம் மாட்டைக் கூர்ந்து பார்த்தான். விஷயம் பிடிபட்டது. - -

"வலி கண்டுடுத்துப் போலிருக்கே” என்றுன்.

“என்னுது? w

"வலி கண்டுடுத்து."

'வலி கண்டுடுத்து. இல்லையா! அடேயப்பா. எப்படியடா சம்முகம் சொல்லிப்புட்டே? அந்த வித்தையெ கொஞ்சம் சொல்லித்தாடா எனக்கு" குத்தலான குரலில் சொல்லிக் கொண்டே வந்து, குரலே மாற்றி, டேய், வலி கண்டுடுத்துனு அந்த ரூமிலெ. இருந்த மேனிக்குத் தெரிஞ்சுண்டு தானேடா நான் எழுந்து வந்தேன். கூப்பிட்டுச் சொல்லித்து எங்கிட்டெ, நீயெல்லாம் கிர்ன் பெத்துதின்ன கயிறு எடு’னு சொல்ற ஜாதி. மாடில்லாத ஊரிலெ பிறந்தவன். இன்னிக்கு கன்னு போட்டுடுமாம்! கண்டு பிடிச்சு சொல்லிப்புட்டான் பிரகஸ்பதி!” குரலேயும் வலித்து, முகத்தையும் வலித்தார் கிழவர். . -

சம்முகத்துக்கு முகம் தொங்கிப் போய்விட்டது. கிழவர் மேலும் வெற்றிவாகை சூடிக்கொண்டே போளுர், .

"நீ என்ன சொன்னே? இந்த மாசம் கடேசிலேதான் பாக்கனு மின்னெ. நான் என்ன சொன்னேன்? அமாவாசை தாண்டினு, உன்னைத் தூக்கிண்டு இந்த வீட்டைச் சுத்தி நாலுதரம் வரேன்னு, சொன்னேன். சொன்னேளு? என்னுச்சு? என்னடாய்யா பேச்சு மூச்சில்லெ? வெத்தல போட்டுண்டிருக்கயோ?” .

சம்முகத்துக்கு அவமானம் தாங்க முடியவில்லை. -

சிரித்துக் கொண்டே அவசியமில்லாமல் அங்குமிங்கும் சென்ருச் கிழவர். சம்முகத்தை வெற்றி கொண்ட பெருமிதம் முகத்தில் விளையாடிற்று. - - . -

"என்னுது நின்னுண்டிருக்கே? சோளக்கொல்லே பொம்மை மாதிரி, சரசரானு ஜோலியைப் பாரு. சாணத்தை அள்ளிப்போடு, ரெண்டு சாக்குத்துண்டு எடுத்துண்டு வா. கிகாஞ்சம் பொடி வைக்கோலைச் சுருட்டி வச்சுக்கோ. மொண்னேக் கத்தி ஒண்ணு. வச்சிண்டிருந்தயே, அதெ சித்தெ திட்டிக்கறயா? கன்னு பிறந்து விழுந்ததுமே சித்ரவதை ஆரம்பிக்க வேண்டாம்." - -

"இந்தத் தடவையாவது கிடாரி பிறக்கணும், சாமி” என்றன்.

சம்முகம். - . . . ‘. . . .

"சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு அழுது வழியாதேன்னு எத்தனை தடவைதான் சொல்றது? நம்புட்ா, பிறக்கும். :