பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடாரி -

சொல்றேன், இந்தத் தவா கிடாரிதான் பிறக்கப் போறது. அப்படிப் பிறக்காட்டா, இதோப் பாரு என்னே இப்படி சொடக்குப் போட்டுக் கூப்பிடு. ஆமாம் சொடக்குப் போட்டுக்கூப்பிடு' கிழவர் சொடக்குப் போட்டுக் கொண்டே நாலு வீடு கேட்கும்படி இரைந்தார். உத்ஸ்ாகம் கரை புரண்டு விட்டது.

சம்முகம் மடமடவென்று வேலையைக் கவனித்தான். கிழவர் தொழுவத்தில் உட்கார்ந்துவிட்டார். -

கிணற்றடியிலிருந்து வாளியை எடுத்துக் கொண்டு வருகிற பொழுது, சம்முகம் கிழவர் பக்கம் மிகவும் நெருங்கிவந்து இருந் தாலும் இந்தத் தவாவும் கோமதியம்மைக்கு பொட்டைப்புள்னெ பொறக்கணுங்குதில்லே. அய்யருக்கு ரொம்ப வருத்தம், அசந்து போயுட்டாரு அசந்து” என்று சொல்லிக்கொண்டே வாளியைக் கீழே வைத்தான். -

'அம்புட்டும் கண்டே, போடர் போ' என்ருர் கிழவர். 'உடனெ. அப்படிச் சொல்லிப்புட்டேளே, நானும் பதினுேரு வருச மாட்டு இதுக்குள்ளே தாலா லாந்திக்கிட்டு வாறேன். அய்யரு தேச்சர் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்னு வை:புங்க." "ஆமாம், நான் பிறக்கறதுக்கு முந்தியே நீ இங்கேதான் இருக்கெ. மாடுக்கு வலி யெடுத்த தெப் பாக்கத் தெரியலெ, அனக்கருன்.’’ - - -

அசப்பில் மாடுபக்கம் திரும்பிய கிழவர், 'டேய் மாடு படுத்தாச்சு, சாக்குத் துண்டெ எடுத்துண்டு வா. ஒடு' என்று: கத்திக்கொண்டே மாடு பக்கம் விரைந்தார். -

அதே சமயம் கட்டிடத்தின் முன் பகுதியிலிருந்து சம்முகம் சம்முகம் என்று, இரண்டரைக் கட்டையில் சபேசப்பர் குரல் கேட்டது. -

சம்முகம் வாசலப் பார்த்து ஒடிஞன்.

குழந்தைகள் எழுந்திருக்கும் சமயம் அது. பாயைச் சுருட்டி பாய்த் தூக்கில் வைப்பதற்காகச் சம்முகத்தை அந்த நேரத்தில் சபேசய்யர் கூப்பிடுவது வழக்கம்தான். - -

குழந்தைகள் வரிசையாக நடு ஹாலில் படுத்திருப்பார்கள். கோமதியின் பெண் குழந்தைகளில் சச்சு, பங்கசம், கனகம் மூன்று பேரும் அம்மாவுடன் வந்திருந்தார்கள். மூத்த பெண் அன்னபூர்ணி மட்டும், படிப்பு வீணுக வேண்டாமென்ற எண்னத்திலும், "கூப்பிட்ட சத்தத்திற்கு என்னு’ என்று கேட்டதற்கும் அப்பாவுட்ன் தானிருந்தாள்.

சபேசய்யரின், பிள்ளே வயிற்றுப் பேரன் வெங்குவின் தாயார் பிரசவத்துக்குத் தாய்வீடு சென்றிருந்தாலும் அவன் இங்கேதான்

  • for-3