பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઇંઈ - பாற் கடல்

"அம்பிப் பயலுக்காக அம்மா செத்துப்போகமாட்டா' என்ருள் சச்சு, -

இந்தப் பதில் கனகத்துக்கு மிகுந்த திருப்தியைத் தந்தது. சிறிது நேரத்தில் அவள் உணர்விழந்தாள். -

அதற்கும் பின்பும் சச்சுவால் துரங்க முடியவில்லை. இரவு பதி ைெரு மணிக்குமேல் "ஐயோ. அம்மா’ என்ற கூப்பாடு வலுத்தது. கிழவர்கூட வராண்டாவில் வந்து நின்று கொண்டார். அடிக்கொரு தர்ம் என்னடா என்னுச்சு? என்ற குரல் மாடியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. மீண்டும் டாக்டருக்கு போன் பண்ணிஞர் சபேசய்யர். சம்முகம் கடைத் தெருவுக்கும் வீட்டுக்குமாக ஓடிக் கொண்டிருந்தான். அறைக்குள் ஏக களேபரமாக இருந்தது. சயேசய்யர், சாத்தியிருந்த கதவு முன் ல்ை நின்றுகொண்டு; டாக்டர் டாக்டர்’ என்று கூப்பிட்டார். டாக்டர் வெளியே வரவில்லே. கதவு திறக்கப்படவில்லை. - -

தாயின் வேதனேக் குரல் மனத்தைத் தாக்கியபொழுது, கண்ணின் உகுத்தாள் சச்சு. தலேயணேயை வாயினுள் திணித்துக்கொண்டு, மு:இத்தைப் புதைத்தபடி தேம்பினுள். பின்னுல் அவளும் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்து போளுள்.

தாயின் துன்பக்குரல் அலேகள்தான் காலேயில் எழுந்ததுமே மனத் தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன குழந்தைகளுக்கு மூன்று. பேகும் எழுந்து பாயில் உட்கார்ந்து, தாயின் கூக்குரல் கேட்கிறதா என்பதை முதலில் ஆராய்ந்து பார்த்துக் கொண்டார்கள் அப் பொழுது பச்சிளம் குழந்தையின் சிணுங்கல் கேட்டது: முகமெல்லாம் சிரிப்போடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கண்களில் ஒளிகூடி, களே வழிந்தது முகத்தில். - . . .

சச்சு, சாத்தியிருந்த அறைக் கதவை நோக்கி ஓடினுள். பங்க சமும் கனகமும் பின்னல் பாய்ந்தார்கள்.

வெங்கு எழுந்திருந்து தலோட்டில் அவிழ்த்துப் போட்டிருந்த இரட்டை மாடி பஸ்ஸை மீண்டும் அரைஞாணில் கட்டிக்கொண்டு, பாயசம் தயாராகி விட்ட தன் என்று பார்க்க அடுக்களேக்குச் சென்ருன். - . . . .

அறைக்கதவு இலேசாகத் திறந்திருந்தது. சச்சு இடுக்கு வழி பாகப் பார்த்தாள். குழந்தையின் கால்கள் தெரிந்தன. முக்காலியில் வைத்திருந்த தர்மாஸ் பிளாஸ்க்' குழந்தையின் முகத்தை மறைத்தது. - - -

"அம்பிப் பாப்பா, அம்பிப் பாப்பா' என்று களிப்புடன் ஒசை யெழாமல் கையைத் தட்டிகுள் சச்சு. அவளுக்கு நிலைகொள்ள வில்லை. அவளே இடித்துத் தள்ளிக்கொண்டு ப்ார்த்தாள் பங்கசம். கனகம் பார்த்துவிட்டு, 'அம்பிப் பாப்பா கர்ல் வெண்ணெய் கட்டி

w