பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 - பாற் கடல் புத்திகெட்ட ஆடம்" என்று நெஞ்சில் ഞ് வைத்தபடி தன்னைத் தானே நொந்துகொண்டாள் செல்லம்மா. • * ...” . அரைமணி நேரம் குஞ்சம்மா பக்கத்தில் உட்கார்ந்துவிட்டுக்

கீழே வந்தாள், செல்லம்மா.

செல்லம்மா, பின் வராண்டாவில் வந்ததும் வெங்கு கொல்லை

தி இ! 经 沁 o யில் நின்றுகொண்டு, 'மாமி, மாமி, மாடு செத்துப்போயுண்டிருக்கு” என்று கத்தினுன். •

செல்லம்மா தொழுவம் பக்கம் சென்ருள்.

- மாடு படுத்தபடி காலேத் தரையில் பட்பட் டென்று அடித்துக் கொண்டிருந்தது. கிழவர் முன்னுல் உட்கார்ந்து முகத்தைக் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தார். சம்முகம் பின்னுல் நின்றுகொண் டிருந்தான். , ~ . -

மூன்று பெண் குழந்தைகளும் சற்றுத் தொலையில் வரிசையாக முட்டுக்குத்தி உட்கார்ந்து கொண்டிருந்தனர். காலேயில் அடைந்த ஏமாற்ற உணர்வுக்கு இத்தக் காட்சி இதம் கொடுத்தது. .

"எழுந்திருந்து போங்கடி இங்கிருந்து” என்று கத்தினுள் மாமீ.

"சும்மா. இருக்கட்டும். குடி முழுகியா போகும்? காலா காலத் திலே எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே” என்ருர் கிழவர்.

"இவரொருத்தர்” என்று சொல்லியபடி முகத்தை இழுத்துக் கொண்டே அடுக்களைக்குச் சென்றுவிட்டாள் மாமி. - - - - குழந்தைகள் அங்கேயே உட்கார்ந்துகொண்டிருந்தன. வெங்கு

மட்டும் கிழவர் பக்கம் வந்து நின்றுகொண்டிருந்தான்.

மாடு தலேயைத் தூக்கி ஒரு தடவை அலறிற்று. கன்றின் முகம் வெளியே வந்துகொண்டிருந்தது.

‘முகத்தைப் பாத்தா காளங்கன்னு மாதிரி இருக்கு" என்ருன் சம்முகம். , - - - - "வாயை மூடு, அபசகுனமா ஏதாவது உள ருதே. முகத்தைப் பாத்தாத் தெரியுமோ? மண்டுஸ், மண்டுஸ்: என்ருர் கிழவர். -

“ஒரு பார்வைக்கு அப்படிப் படுது” என்று இழுத்தான் சம்முகம். -

“நீர் ஒரு பார்வையும் பாக்க வேண்டாம். நான்தான் சொல் றேனே கிடாரிதான் போடும்னு. மேற்கொண்டு என்ன பார்வை வேண்டிருக்கு மண்ணுப்போன பார்வை' கிழவருக்கு ஆங்காரம் அடி வயிற்றிலிருந்து வந்தது. -

மாடு படக்கென்று எழுந்து நின்று, இருபுறமும் பக்கவாட்டில் புரண்டது. . . . . . . . . . . . . . . . . -