பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேவலம் ஒரு காய் ! 雯š

அன்று பகல் வேளேதான். அடர்ந்த துளு மரத்தில் கவுதாரிக்குக் கண்ணி விரித்தான் கன்னியப்பன். ஈச்சம் புதரை அடுத்துத் தாழ வளர்ந்திருந்தது அந்த மரம். மறைந்திருக்கும் அபாயத்தை அதனல் தான் உணரவில்லே அவன். புதர் மறைவிலிருந்து குபீரென்று அவன் மேல் பாய்ந்துவிட்டது ஒரு சிறுத்தைப் புலி, - -

"கறுப்பா!' என்று அலறிக்கொண்டு மரத்திலிருந்து விழுந்தான் கன்னியப்பன். - -

அடுத்த விஞ டி-அந்தப் பட்டி நாய்க்குத்தான் என்ன துணிச் சலோ-அந்தச் சிறுத்தையுடன் சரிக்குச் சரியாக நின்றது. கன்னியப் பன் கையில் குத்துக்கோல் இருந்ததோ, கறுப்பன் பிழைத்ததோ: சிறுத்தைப் புலியின் தோலுக்குக் கிடைத்த பணமெல்லாம் கறுப் பனுக்கும் தனக்கும் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடவே. சரியாக இருந்தது. - * - கன்னியப்பன் அதன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு முகத்தோடு முகம் வைத்துக்கொண்டான்.

"சரிதான், கொஞ்சியது போதும். பன்றியை இழுத்துப் போட்டு விட்டு வாடா. அங்கே ரோஸிக்கு சூப் வைத்தானு, எலும் பு போட்டான போய்ப் பார்க்கனும்,' என்று முன்னுல் விரைந்தான்

துரை. . . -

கன்னியப்பன் எல்லாமான தன் நாயை இழுத்துக்கொண்டு முன்னே நடந்தான். - - - -

சனப்பனுரர் எஸ்டேட் பாக்குத் தோப்புக் காட்சி கண் கொள் ளாக் காட்சி. ஒரு பாக்கு மரத்தில் ஏறுகிறவன் பாக்குப் பழத்தைப் பிய்த்து எறிந்ததும் அதன் உச்சியிலிருந்தே அடுத்த மரத்தில் தொத் திக்கொள்வதும், அப்படியே எல்லா மரங்களிலும் தாவுவதும் வேடிக்கையாக இருந்தது. அதைக் கவனித்துக்கொண்டே மேலே நோக்கியபோது கூட்டமாக வானத்தில் நீந்தும் மணிப் புருக்கள் துரையின் கண்ணேக் குத்தின. -

இரட்டைக் குழல் துப்பாக்கி மேலே உயர்த்தப் பட்டது. ஒரே தோட்டாதான் செலவு. குபீரென்று பல புருக்கள் உதிர்ந்தன.

ரோஸி-துரையின் உயர்ந்த ஜாதி நாய் அவற்றைக் கெளவி வரப் பாய்ந்தது. கன்னியப்பனின் கறுப்பனும் ஒத்தாசைக்குப் பாய்ந்தது. அதைப் பார்த்ததும் துரை பாய்ந்தான் அதை நோக்கி. துப்பாக்கியைத் திருப்பிக்கொண்டு அதன் விலாப் புறத்தைத் தட்டி விட்டான். 'இந்த வங்கு பிடித்த நாய்க்குப் பக்கத்தில் ரோஸி போனுல் அதற்கும் தொத்திக்கொள்ளும்,' என்ருன் கடுமையாக. - அடிபட்ட கறுப்பன் வாழ் ஊழ் என்று கத்திக்கொண்டே துரையின் காலைச் சுற்றிக்கொண்டது. கன்னியப்பன் தலை குனிந்து அதைத் தட்டிக்கொடுத்து இழுத்துச் சென்றன்.