பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாற் கடல்

சுடப்பட்ட புருக்களுடன் கூடாரத்துக்குச் சென்றபோது அவ. னுடைய வேலைக்காரன் முதலில் அந்த ரோளியைத் தான் கவனித் தான். பீங்கான் கோப்பையில் கமகமக்கும் உணவு வகைகள். அதைப் பார்த்து ஒதுங்கி நின்றன் கன்னியப்பன். -

பரிமாறிய உணவில் பாதியைக்கூடத் தின்றிருக்காது ரோஸி. முன்னங் காலே ஊன்றி உடலைப் பின்புறம் நெளித்து வளைத்து உடலைச் சிலுப்பிக்கொண்டது. அத்துடன் பின்னங் கால்களால் மண்ணைப் பிருண்டி தன். சாப்பாட்டுத் தட்டில் தள்ளியது. கன்னி யப்பன் மனம் கேட்காமல், 'கறுப்பன் அதை நன்ருகத் தின்னும் எசமான். அந்த மிச்சத்தை எடுத்துக்கொள்ள ட்டுமா எசமான்?" என்று அஞ்சி அஞ்சிக் கேட்டான் துரையிடம்,

துரை உதட்டுக் கோணலில் ஓர் அலட்சியச் சிரிப்பைச் சிந்திக் கொண்டு, போடா, அசல் புல்டாக் வகையில்லையா உன் நாய்! அதற்கு இந்த மாதிரி சாப்பாடு இல்லாமல் குறைவாயிருக்கிறதோ?’ என்று எழுந்து போய்விட்டான் படுத்துக்கொள்ள. -

கூடாரத்தின் மூலேயொன்றில் கட்டப்பட்டிருந்த கறுப்பன் தனக் குள்ளேயே ஊளேயிட்டுக்கொண்டிருந்தது. - -

கண் மூடித்தனமாய் நேற்றுக் குறவனுடன் ஒடியது எத்தனை தவருகப் போய்விட்டது! துரை காலிலும் கைப்புறத்திலும் ஏற்பட் ஆடிருந்த சிராய்ப்புகளுக்குக் களிம்பு போட்டுக்கொண்டிருந்தான். அவன் உடம்பில் உண்டான எரிச்சல் மனத்திலும் உண்டாயிற்று.

டேய் கன்னியப்பா!' என்று அதட்டினன்,

கூடாரத் திரையை ஒதுக்கிக்கொண்டு கன்னியப்பன் எட்டிப் பார்த்தான். 'எஜமான்!” -

கட்டில் விளிம்பில் சாய்த்து வைத்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்து மடக்கித் தோட்டாக்களைச் செருகிக் கொண்டே பேசினன். 'முதலில் என் துப்பாக்கிக்கு ஒரு காட்டுப் பன்றிதான் இரையாக வேண்டும். அது இருக்கிற இடமாகப் பார்த்து அழைத்துப் போ.” - - * கூனிக் குறுகி நின்ற கன்னியப்பன்."ஐயா கோபித்துக்கொள்ளக் கூடாது. இந்தத் துப்பாக்கிக் குண்டுக்கு மசியக்கூடிய்தல்ல அந்த ஜாதி. தப்பியோடி விடும்,' என்ருன். ---.

தன் வேட்டைத் திறத்துக்கு விடும் சவாலாகத்தான் அதை நினேத்தான் துரை, “அதையும் பார்த்துவிடுகிறேன். கம்ான் ரோஸ்: ஒன்று தன் ஜாதி நாயையும் இழுத்துக்கொண்டு துப்பாக்கியைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினன். -

கன்னியப்பனுக்குப் பின்னே அவனுடைய கறுப்பனும் ೩555