பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பாற் கடல்

"ஆள் இடிச்ச புளி மாதிரி நிற்கிருர் பார்! சொல்வது கொஞ்ச மாவது காதில் ஏறுகிறதா? ஏனய்யா, சொல்லுமேன்!”

ஈசுவரனுக்குக் காதில் விழவில்லை. விழாதுதான். காரணம், அவரது காதில் அப்போது ஒலித்துக்கொண்டிருந்தது அவருடைய குடும்பத்தாரின் ஒலம்தான்!

வெளியிலிருப்பவன் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ, என்று பேசிவிடுகிருன். ரூபாய் ரூபாயாகச் சம்பளம் வருகிறதைச் சொல்லுகிருனே தவிர, போகிறதை எவன் பார்க்கிருன்?

வியாதிப் பிண்டமாகப் படுத்திருக்கும் மனேவிக்கு என்ன செல வாகிறது என்பது அவருக்கும் அவரைப் படைத்த கடவுளுக்கும் மட்டுமே தெரிந்து இருக்கக்கூடிய பரம ரகசியம். மனேவியின் நோஞ்சல் உடம்புக்கு இந்தக் குறிப்பிட்ட ஊரின் சீதோஷ்ண நிலை ஒரளவு அனுகூலமாயிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகப் பல்லேக் காட்டி, மண்டியிட்டு, கெஞ்சாததெல்லாம் கெஞ்சி அந்த அ8ணக்கட்டுப் பிரதேசமென்ற பொட்டல் காட்டுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தார் ஈசுவரன்.

உத்தியோக ஒழுங்குக்குப் புறம்பாக எதையுமே செய்த்தில்லை; செய்ய மாட்டார் அவர். காலணுக் காசுகூட லஞ்சமென்று கண்னெடுத்தும் பார்க்க மாட்டார். அதல்ை அவருக்குக் கீழ் உதவியாளர்களாகப் பணியாற்றிய பலரது பொல்லாப்பையும் சாபத்தையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தார். அதுவேறு கதை:

மகன் படிக்க, மகள் படிக்க, மனேவிக்கு மருந்தும் பழமும் வாங்க, பழைய கடன்களே அடைக்க: ஆள் புதுக் கடனில்லாமல் தள்ளுவதே விழி பிதுங்குகிறது. இந்த ஒன்றரையணு வேலைக்கும் ஆபத்துவந்து விட்டால், சந்தி சிரிக்க வேண்டியதுதான்! இந்த ஒர்ே நிஜன்ஷ். பயம்தானே எந்த வார்த்தை காதில் விழுந்தாலும். காதில் விழாததுபோல் நடந்து கொள்ளப் பழக்கியிருந்தது அவ்ரை?

"விளுத ஒரு மனுஷனக் கெடுத்த வேண்டாமே என்ற ஒரே காரணத்துக்காகத் தானப்யா பார்க்கிறேன். வேலை தெரியவில்ஆ, வேலையிலே சிரத்தையில்லே என்ருல் இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு, ஏனய்யா எங்கள் பிராண8ன் வாங்குகிறீர்?"

சங்கரன் புல்டோசர் போல நின்றிருந்த இடத்திலேயே ஒரு சுற்றுச் சுற்றித் திரும்பி, ஜீப்பில்போய் ஏறிக்கொண்ட்ார்.

"நாளேக்குள்ளாக டெம்பரரி பிரிட்ஜ' வேலையாவது முடியனும். நான் மேற்கே போய்விட்டுத் திரும்பும்போது, 器 என்ருல் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. அதைப் பற்றி எனக்குத்_ ஆவலேயுமில்லை".-சங்கரனின் குர்ல் தேய்ந்து மறைய, ஜீப் தூரத்தே சென்று ஒரு புள்ளியாக மறைந்த்து