பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாற் கடல்

அவனுடைய துப்பாக்கி பன்றியைக் குறி பார்க்கும்போது கன்னி யப்பன் பதறிஞன்: 'சாமி, நாய் ஜாக்கிரதை.’’ -

துப்பாக்கி பயங்கரமாக வெடித்தது. காட்டுப்பன்றி துள்ளிய வேகத்தில் அதன் தோலே மட்டும்தான் உரசிக்கொண்டு போக முடிந்தது அந்தக் குண்டால். பன்றி தெறித்தோடும் திக்கில் படி ரென்று மீண்டும் வெடி. நிச்சயம் அடிபட்டிருக்க வேண்டும். ஆளுல் இத்தனே கடுவேகத்துடனு பாயும் ஒரு பன்றி! மானுக்கு இளேத்த, தில்லை. அதன் வேகம், -

கறுப்பா, விடாதே, பிடி’ குறவன் குரல் கேட்டதும் கறுப்பனின் பாய்ச்சல் இன்னும் அதிக மாயிற்று. அந்தப் பன்றியுடனே சென்று மறைந்தது அது.

ரோவி வாலேக் குழைத்துக்கொண்டு துர்ையின் அருகில் வந்: தது. தன் வீரத்துக்குச் சரியான பாராட்டுக் கொடுக்கிறது அது என்ற எண்ணத்தில் அதைத் தட்டிக் கொடுத்தான் துரை. உடனே அருகிலிருந்த புதரை நோக்கிப் பாாய்ந்தது. தரையோடு ஒட்டிக் கொண்டு நகர்ந்த காடையின்மேல்தான் அப்படித் தாவியது. வெற்றி தான். அது கெளவிக்கொண்டு வந்து காட்டிய காடையைப் பார்த் துப் பூரித்துப் போன்ை துரை. .

அன்றைய வேட்டையை முடித்துக்கொண்டு திரும்பும்போது நடுப்பு ல் சாப்பாட்டு நேரமும் மிஞ்சிவிட்டது. சமையற்காரனப் பரிமாதச் சொல்லிவிட்டு ரோஸியுடன் கொஞ்சம் விளையாடத் துவங்கிளுன் துரை. அவன் வாயில் ரொட்டித் துண்டைக் கெலாவிக் கொண்டு நிற்பதும் ரோஸி தாவிப் பாய்ந்து அதைக் கெளவிப் பறிப் பதுமாய் இருந்தனர். பரிமாறிவிட்டு வந்த சமையல்காரன், அவர் களைக் கூப்பிடவும் அஞ்சி, கூடார வாசலிலேயே நின்ருன்,

கன்னியப்பனுக்கு இந்தப் பக்கத்திலேயே நாட்டமில்லை. தன் னுடைய கறுப்பன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்: தான். . . . -

கையிலிருந்த ரொட்டித் துண்டுகளெல்லாம் தீர்ந்த பின்னர்தான் அருகிலிருந்த பலாமரத் தண்டில் சாய்த்து வைத்திருந்த துப்பாக்கி யைத் தூக்கிக்கொண்டு உள்ளே திரும்பினன் துரை. -

அப்போதுதான் உற்சாகத்தோடு குரைத்துக் கொண்டே கறுப் பனும் அங்கு வந்தது. அந்தக் குரைப்பைக் கேட்டுக் குறவன் அரு. கில் வந்தான் துரை. பாய்ந்து வந்த கறுப்பன் அவர்கள் இருவர் கால்களேயும் பொதுவாகச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் வாய்ப் புறம் உடம்பெல்லாம் ஒரே ரத்தச் சேறு. காட்டுப் பன்றியை வெற்றி கொண்ட எக்களிப்பிலே துரையின் மேலேயும் விழுந்து புரண்டது. - - - . . . . . . .