பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலே 53

அமைத்து மலரின் மென்மையையும் பால் நிலவின் தன்மையையும் கொண்ட கலவை பூசி, வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் நோக்கத்துடன் இந்தச் சுந்தரியைப் பூலோகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்: அவளைப் பார்க்கும்போதெல்லாம் சிவந்த எல்லேக்குள் தாழம்பூ நிறத்தில் ஒளிரும் விளக்கின் சுடர்தான் வேலுவின் கண்முன் தோன் தும். அந்த அழகில் அச்சம் தரும் ஒரு தீவிர சக்தி ஜ்வாலே விட்டுக் கோண்டிருந்தது. கண்ணைப் பறிக்கும் மின்னலின் வெட்டு எவ்வளவு தான் ரம்மியமாக இருந்தாலும் கண்ணிமைக்காமல் பார்க்க வேண் -டும் என்ற துணிவு மட்டும் நமக்கு வருவதில்லையல்லவா? அதளுல் அந்தப் பெண்ணை நோக்கும்போதெல்லாம, எண்ணும்போதெல்லாம் துாய்மையான, பயமும் பவ்யமும் கலந்த ஒரு உணர்ச்சி வேலுவின் மனத்தில் உண்டாவது வழக்கம். பார்த்தவுடன் இப்படிப்பட்ட புனிதமான உணர்ச்சியைத் தூண்டிவிட்ட ஒரே பெண் நாளதுவரை இவள்தான். அப்படியானல் அவள் எவ்வளவு நல்லவளாக யிருக்க வேண்டும் அவளது நெஞ்சில் கிளர்ந்த காதல் எத்தகைய சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும்! அவள் வாயிலிருந்து பிறக்கும் வாக்கு இனிமையாகத்தானே இருக்க முடியும்? கொள்ளே அழகும், குன்றுபோல் குணமும் உடைய இந்தப் பெண்ணின் பரிபூரண அன் பைப் பெற்றது அந்த இளைஞனின் பூர்வ ஐன்மம் என்று ஒன்று உண்

டாளுல் அதில் செய்த தவத்தின் பயணுகவே இருக்க வேண்டும்!

தாதர் சர்க்கிளில் வளைந்து திரும்பி நீண்டு கிடந்த வின்லன்ட் ரோடில் வழுக்கி விழுந்துவிடும் வேகத்தில் டாக்ஸி ஓடியது. டாக் லிக்குள் நிலவியிருந்த அமைதி கசப்பு மருந்தைக் குடிப்பதுபோ லிருந்தது. அவ்விருவரும் பேசவேண்டியதை யெல்லாம் பேசித் தீர்த்திருக்க வேண்டும். ஆளுல் காதல் நெஞ்சம் இந்த உலகத்தில் புத்தம் புதிய கற்பனைகள் வற்ருத ஊற்றுப்போல் உதிக்கும் இடம். அதிக நேர மெளனத்துக்கு அங்கு இடம் கிடையாது. இது அநுபவ வாக்காக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இதோ இவர்கள் திரும்பவும் பேச ஆரம்பித்திருப்பார்களா? -

"விஜயா! இதோ பார், நான் இத்தனை நேரம் உன்னிடம் கூறிய தெல்லாம் நினைவிலிருக்கட்டும். இதைப்பற்றி நாம் தினமும் பேசி" யிருக்கிருேம். அதனுல் புதிதாக் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. பயந்து பயந்து நாம் சத்தித்துக் கொள்வதில் சந்தோஷம் இருக் கிறது என்று நீ நினைக்கிருயா? இந்த வேதனையிலிருந்தும் பயத்தி லிருந்தும் விடுபடுவதற்குள்ள திட்டத்தைத்தான்......!" -

'உஸ்......அதற்குமேல் நீங்கள் பேச வேண்டாம். நான்தான் "சரியென்று அப்பொழுதே சொல்லிவிட்டேனே. என்ருலும் ஏனுே என் உள்ளம் நடுங்குகிறது.' . -

'மறுபடியும் சொல்லுகிறேன், விஜி, இப்படி நடுங்கிச் சாவதில் அர்த்தமில்லை. நீ செய்யும் காரியத்தினுல் துரோகம் இழைப்பதாக அந்தராத்மா இடித்துக் காட்டினுல் நீ தங்கிவிடலாம். ஆளுல்...