பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலே 55

அதை முடிக்கிற வரைக்கும் கண்மூட மாட்டான்' என்று கூறினன் அவர்கள் மொழியிலேயே.

'அது மட்டுமல்ல, அப்பனே! இது பரம ரகசியமாக இருக்க வேண்டும்!” -

"ஆ, அதென்ன அப்படிச் சொல்லிப்பிட்டிங்க இந்த நெஞ்சுக் குள்ளே ஒரு விஷயத்தைப் போட்டுட்டேன்னு அப்புறம் கடவுளே வந்தாலும் அறிஞ்சுக்க முடியாதுங்க. நீங்க கிஞ்சித்தும் பதருதீங்க!”

கடவுள் என்ற சொல்லேக் கேட்டதும் அந்த யுவதி திடுக்கிட் டாற்போல நிமிர்ந்து பார்த்தாள். அந்த ஒரே விளுடிக்குள் அவள் முகத்தில் விவரிக்க முடியாத கலவரத்தின் நிழல் படிந்து மறைந்தது. அவள் சட்டென்று. "ரொம்ப நேரமாகிவிட்டது, நான் வருகிறேன்! என்று கூறிவிட்டு வீதியில் இறங்கி விடு விடுவென்று நடக்க ஆரம் பித்தாள். அடுத்த முனையில் திரும்பும்போது அவள் முகத்தைத் திருப்பி அந்த இளைஞனே ஒரு தடவை பார்த்தாள். அவன் கரத்தை ஆட்டினன். அடுத்த விடிை அவள் உருவம் மறைந்துவிட்டது.

மிது நாள். அரோரா தியேட்டரில் ஆறரை மணிக் காட்சிக்கு "க்யூ நிற்கும்போது, வேலுவின் டாக்ஸி குறிப்பிட்ட இடத்தில் வந்து நின்றுவிட்டது. டாக்ஸியை ஒட்டியிருந்த காம்பவுண்டு சுவரின் உட்புறத்தில் வளர்ந்து வீதிபக்கம் கவிந்திருந்த மனுேரஞ்சித மலரின் கோடி பரப்பிய சுகந்தம் 'கம் மென்று வீசியது. முன் பணிக்கால மாதலால் இயற்கை தன் நீல நிறத்திரையை மெல்ல மெல்ல இழுத்து உலகத்தை மறைத்துக்கொண்டிருந்தது. தெருவின் முனேயில் பதிந்த வேலுவின் கண்கள் விஜயாவின் உருவத்தை எதிர்பார்த்துக்கொண் டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள்! சில மணி நேரத்தில் அவள் அந்தக் களை பொருந்திய வாலிபனுடன் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருப்பாள். அவர்களது வாழ்க்கைப் பகுதியின் இரண்டாவது அத்தியாயம் இன்பமான பிரய்ாணத்துடன் ஆரம்பமாகும். பிறகு என்ஜின் லேட்'டின் பிரகாச மான வெளிச்சத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக் கும் ஒளி நிறைந்த பாதையைப்போல் அவர்களது வாழ்க்கையும்...!

வேலாயுதம் தன் கைக்கெடிகாரத்தைப் பார்த்தான். ஏழு அடிக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தன. அவன் உள்ளத்தில் ஒரு பரபரப்பு மூண்டது. அவள் ஏன் இன்னும் வரவில்லை? -

தெருவில் போவோரும் வருவோருமாக இருந்தார்கள். முனையில் திரும்பிய எத்தனையோ ஸ்திரீகள் அவனே நோக்கி வந்து அவனேயும் தாண்டிச் சென்ருர்கள். ஆளுல் கொழுந்து விட்டெரியும் அழகுடைய அந்த தங்கையை மட்டும் காணவில்லே! கடிகாரத்தின் நீண்ட முள் வெறி பிடித்ததுபோல் சுற்றுவதாகத் தோன்றியது. மணி ஏழைக் கடந்து ஐந்து திமிஷங்கள்...பத்து...பதினைந்து...வேலுவின் இதயம்