பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பாம் கடல்

படபடவென்று அடித்துக்கொண்டது. ஒருவேன்...ஒருவேளை அவள் வரவே மாட்டாளோ? தன் மனத்தை மாற்றிக்கொண்டிருப்பாளோ? அல்லது விஷயம் வெளிப்பட்டுக் குடும்பத்தினர் அவளே ஒர் அறை யில் அடைத்துவைத்து, 'பெண்ணே! இப்பொழுது உன்னுடைய காதல் என்ன் செய்கிறது, பார்ப்போம்!' என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிருக்களோ?

வேலு நம்பிக்கை இழக்கும் தறுவாயில் மறுமுனையில் விஜயா வின் உருவம் தோன்றி வேகமாக அவனே நோக்கி முன்னேறியது. தன் முகத்தை முக்காடிட்டுக்கொண்டு பதற்றத்துடன் வந்தவள் டாக்ளியின் கதவைத் திறந்து உள்ளே கோழிக்குஞ்சைப்போல் பதுங்கிக்கொண்டாள். வேலு வண்டியை ஸ்டார்ட் செய்து மெயின் ரோட்டில் விட ஆரம்பித்தான். -

"ஏம்மா, இத்தனைநேரம்? உங்களை எதிர்பார்த்துஎதிர்ப்பார்த்துக் கண்ணு பூத்துப் போச் சுங்க. ஏழு நாற்பத்தைத்துக்கு, டெக்கான் குயின் புறப்பட்டுவிடுமே. இன்னும் இருபது நிமிசத்திலே சேர்ந்தா க்னுமே!’ என்றதும் ஆக்ஸிலேட்டரை அழுத்தினன். வண்டி வேகத்தால் உந்தப்பட்டு விரைந்தது.

'இன்னும் வேகமாக விடு, அப்பா' மைல் முள் பத்து, இருபது என்று ஏறிக் கொண்டிருந்தது. தன்னை மறந்த நிலையில் வேலுவின் கைகளே வேறு ஏதோ ஒரு சக்தி தான் இயக்கியிருக்கவேண்டும். இப்பொழுது வண்டி நாற்பது மைல் வேகத்தில் ஒடிக் கொண்டிருந்தது. ஐ.ய்...யோ இதென்ன?... அடுத்த திருப்பத்திலிருந்து மெயின் ரோட்டில் கலக்க வரும் இந்த ராட்சச லாரி,.. * -

வேலு பிரேக்' போட்டு வண்டியை நிதானப்படுத்துவதற்குள் குறுக்கே பாய்ந்த மலேபோன்ற லாரியின்மீது டாக்ஸி பயங்கர சத்தத் துடன் மோதியது. 'வில்!” என்ற ஒரு அலறலின் எதிரொவிடிட்டும் எங்கும் பரவியது. - -

卡、

"ஜஹாங்கீர்’ ஆஸ்பத்திரியின் இரண்டாவது மாடியில் அறுபத் தொன்ருவது வார்டில் பிரவேசித்த நர்ஸ் ஒரு கணம் ஆச்சரியக் தினுல் ஸ்தம்பித்து நின்ருள். கட்டிலில் பிரக்ஞையிழந்து உடம்பு முழுவதும் கட்டுக்களுடன் கிடந்த ஆசாமியின் முகம் அசைந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் மெல்லத் திறந்துகொள்வதைக் கவனித்த நர்ஸ் இளநகை செய்தாள். திடீரென்று அவன் கண் களில் எதையோ ஞாபகப்படுத்திக் கொண்ட ஒரு உணர்ச்சி பிர்தி பலித்தது. சடக்கென்று கட்டிலில் எழுந்து உட்கார முயன்ற அவனே நர்ஸ் பாய்ந்து வந்து-பிடித்துக் கொண்டு, "இப்பொழுது நீ எழுத் திருக்கக் கூடாது' என்று கூறினுள். • , - -