பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடித்த சிலையாய் நின்று விட்டிருந்த ஈசுவரன், உணர்வு. பெற்று அசையச் சற்று நேரம் ஆயிற்று. அவருக்கு இந்த அனுபவம் புதிதல்ல. அந்த அணைக்கட்டுப் பகுதியில் கண்டிராக்டர்களான விரபல எஞ்சினியரிங் கம்பெனி ஒன்றின் எஞ்சினியரான ஈசுவர னுக்குக் கம்பெனியின் பிரதம எஞ்சினியராக-வெகு சமீபத்தில் அயல் நாடுகளிலிருந்து திரும்பிய-சங்கரன் அங்கு வந்து சேர்ந்தபோது துவங்கிய அனுபவம் அது! . .

சங்கரன் மிகச் சிறந்த நிபுணர். அவரது திறமையை உள் தாடும், வெளி நாடுகளும் ஒருங்கே போற்றிப் பாராட்டின. ஆளுல் சங்கரன் என்ற எஞ்சினியரைவிட, சங்கரன் என்ற மனிதருடன் நெருங்கிப் பழகிய பாக்யம்-அல்லது துர்ப்பாக்கியம்-ஈசுவர ஆணுக்குத்தான் வாய்த்தது! வெளி நாடுகளுக்கெல்லாம் போய் வந்த சங்கரன், தன் மனிதத் தன்மை, பண்பு, இவற்றையெல்லாம் கூட மறந்துபோய் வெளி நாட்டிலேயே விட்டு வந்து விட்டாரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு, அவரது நடவடிக்கை இருந்தது.

தன் சம நிலைக்குக் கீழ்ப் படியில் உள்ள எவனுமே உத்தியோகஸ்தன் அல்ல, தன் தயவில், தன் மேற்பார்வையில், வயிறு வளர்க்க வந்திருக்கும் ஒருவன், தான் பேசுவதை அல்லது ஏசுவதை அனுபவிக்கப் பிறந்தவன் என்ற போக்கே சங்கரனிடம் மேலோங்கி நின்றது. .

அடங்கியே பேசி, பணிந்தே நடந்து யாரையுமே எதிர்த்து ஒரு சொல் பேசாமலே வளர்ந்து விட்டவர் ஈசுவரன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து பணிவாலும், படிப்பாலும் முன்னேறிய அவர் வேறு எவ்விதமாகவும் இருந்திருக்க முடியாது. வயதால் பெரியவர், அனுவபத்தில் முதியவர் என்பதெல்லாம் 'திகுதி"யுடன் சேர்ந்த தாகுமா? சங்கரன் பேசுவதை யெல்லாம் கேட்டு, விழுங்கி, ஜீரணித்துக் கொள்ளத்தானே ஈசுவரனுக்குச் சம்பளம் கொடுக் கிருர்கள்! ... -- ” ; * . . . -

சங்கரன் அப்படித்தான் நினைத்தார். . . . . . . . . . - பல சிறந்த திட்டங்களுக்கு அஸ்திவார மூளையாக இருந்த சங்கரனுக்கு தனது கர்வம் பிடித்த போக்குக்கும், வெறித் தனத் திற்கும் ஒரு சிறு அனே போடத் தெரியாமலிருந்தது விந்தைதான்!

"கூப்பிடய்யா அவரை!’’ * . . . . ... - - - பல புலவென்று பொழுது விடியும் தருணம், மூன்ரும் நாள் காலையில் சங்கரனின் குரல் அந்தப் பிரதேசத்தில் உக்கிரமாகக் கிளம்பி, பாருங்கற்கள் குவித்திருத்த பகுதியிலும், எதிரே கல். பிளக்கும் பகுதியில் இருக்கும் குன்றிலும் மோதி எதிரொலித்தது! பெரிய உத்தியோகஸ்தர்கள் நடுங்கிய நடுக்கத்தில், குட்டி