பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாற் கடல்

'அது யாருன்னு தெரியாதுங்க. தினமும் அவங்க சந்திச்சுப் பாங்க. டாக்ஸியிலே திரும்பி வருவாங்க. "ஆக்ஸிடெண்ட் நடந்த முந்தின நாள் அவங்க இரண்டுபேரும் இனிமே பயந்து பயந்து சந்திக்க முடியாது. ஓடிடுவோம்’னு பேசிகிட்டாங்க. டாக்டர், உங்க உடம்புக்கு என்ன?...ஏன் இப்படி உங்க முகம் வெளுத்துப் போச்சு... நர்ஸ், நர்ஸ்!”

'உஸ்...நர்ஸைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை வேலு உன்னே அறியாமல் நீ எனக்குக் கொடுமை செய்துவிட்டாய். நீ கூறிய விஷயங்கள் இதுவரையில் எனக்குத் தெரியாது. தெரியா மலேயே இருந்திருக்கக் கூடாதா என்றுகூட இப்பொழுது தோன்று கிறது! இப்படிச் சொல்லிவிட்டு டாக்டர் சட்டென்று எழுந்து வெளியே சென்ருர், - - - டாக்டர் வெளியில் சென்றதும் நர்ஸ் வேகமாக ஓடிவந்தாள். "என்னைக் கூப்பிட்டது நீதானே!" "ஆமாம்!" - என்ன வேண்டும்?'

ஒரே ஒரு விஷயம். என்னுடைய டாக்ளியில் பிரயாணம் செய்த அந்த அம்மாளே டாக்டருக்குத் தெரியுமா?" -

'தெரியும். மிக நன்ருகத் தெரியும்!" "அவள் யார்?" - "அவருடைய இரண்டாவது மனைவி!"