பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன லோசனி

  • orr ເວroງ”

"நமஸ்காரம். சித்திக்குத் தாங்கள் ஒழுங்காக அனுப்பி வந்த பணத்தைத் திடீரென்று நிறுத்தி விட்டீர்கள். இரண்டு மாதங்களாக உங்கள் சித்தி மிகவும் சிரமப்படுகிருள். ஞாபகப்படுத்தி எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது நேர்ந்துவிட்டதோ என்று சித்தி வருத்தப்படுகிருள். இந்தக் கடிதத் துக்கும் பதில் இல்லை யென்ருல் உங்கள் சித்தி புறப்பட்டு அங்கே வந்துவிடுவாள்.

- உங்கள் சித்தி சொல்படி,

மீனால்ே ரசனசி.” இந்தக் கடிதத்தைப் படித்ததும் கேசவனுக்குக் கோபம்தான் பொத்துக்கொண்டு வந்தது. ஆளுல் அந்தக் கடிதம் முத்து முத்தாக எழுதப்பட்டிருந்ததாகையால் உடனே கிழித்தெறிய மனம் வரவில்லை. அதை எழுதியவள் ஒரு இளம் பெண் என்று அவனது உள் மனம் அவனுக்கு ஏனே சொல்லிற்று. அந்தக் கையெழுத்தின் அழகைப் பார்க்கும்பேர்தே அந்தக் கடிதத்தை எழுதியவளின் அழகை மானசீகமாக அவனுல் காண முடிந்தது. . . .

சித்தி அவளே நினைக்கும்போதே அவனுக்குக் கோபமாக வந்தது. அவன் தகப்பளுர் மட்டும் இரண்டாந்தாரமாக அவளை மணக் காதிருந்தால் அவன் மனம் இத்தஇன் தூரம் சஞ்சலம் அடைய நேர்த் திராது. இத்தனைக்கும் அவன் இன்னும் சித்தியைக் கண்ணுல்கூடப் பார்த்ததில்லை.

கேசவனுக்கு மூன்று வயதாயிருக்கும்போதே அவன் தாயார் இறந்துவிட்டாள். குழந்தைப் பிராயமாதலால் தாயைப் பிரிந்த துயரம் அவனே அதிகம்ாக வாட்டவில்லை. ஆளுல் அவன் தகப்பனர் மனைவியைப் பிரிந்த துக்கத்தில் பாதி உடம்பாகிவிட்டார். குழந்தை கேசவன் மட்டும் இல்லை என்மூல் அவர் தம் உயிரையே மாய்த்துக் கொண்டிருப்பார். கேசவனே வளர்ப்பதற்காக அவர் துக்கத்திை ஒருவாறு மறந்து இருந்தார். அவர் ஒரு மிராசு தாராகையால் அவ ருக்கு வாழ்க்கையில் வேறு கஷ்டம் இல்லை. ஆகவே அளவுக்கு. மீறி மிகவும் செல்வமாகக் கேசவனே வளர்த்தார். கேசவன் எதை. விரும்பிலுைம் அது மறு கணம் அவன் கைக்கு வந்துவிடும். வயது: வளருவது போலவே தாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு. மாகக் கேசவனிடம் முரட்டுப் பிடிவாதமும் வ்ளர்த்துகொண்டே வந்தது.