பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

où பாற் கடல்

கேசவன் நாலாம் பாரம் வரையில் உள்ளுரிலேயே படித்தான். அவன் வகுப்பு மாணவர்கள் சென்னேக்குப் போய்ப் படிப்பதை அறிந்து அவனும் சென்னைக்குப் போக விரும்பினன். கேசவன் ஒரு காரியத்தைச் செய்ய விரும்பிளுன் என்ருல் அதை மாற்றத் திரி நேத்திரளுன பரமசிவனுலேயே முடியாது. குழந்தைப் பிராயத்தில் வளர்ந்த பிடிவாதம் இப்பொழுது வலுப்பட்டு வைரம்- பாய்ந்து :சைக்க முடியாதபடி ஆகிவிட்ட்து. சென்னையில் ஒரு வீடு பார்த்து அங்கு ஒரு சமையற்காரனேயும் அமர்த்தி, கேசவனச் சென்னையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ப்பதைத் தவிர அவன் தகப்பணுருக்கு வேறு வழியில்லை என்ருகிவிட்டது. கேசவன் எஸ். எஸ். எல்.வி. யில் தேறிக் கல்லூரியில் மேல் படிப்புக்குச் சேர்ந்தான். வசதியாக ஹாஸ்டலிலேயே தங்கினன். அவன் போக்கை மாற்ற முடியவில்லை யாதலால் அவன் தகப்பளுர் அவன் வழியே செல்ல வேண்டிய தாயிற்று. -

ஒருவாறு இண்டர் மீடிய ட் பரீட்சை முடிந்தது. கேசவனுக்குத் தான் பரீட்சையில் எப்படியும் தேறிவிடுவோம் என்று பரிபூரண தம்பிக்கையிருந்தது. பரீட்சை முடிந்ததும் ஊருக்குக் கடிதம் எழுதிப் போட்டுவிட்டுச் சில நாட்கள் நிம்மதியாக இருந்தான் கேசவ்ன். நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டும் சினிமா, நாடகம் பார்த்துக்கொண்டும் குஷியாகக் காலம் கழித்துக் கொண் டிேருந்தான். -

இந்தச் சமயத்தில்தான் அவன் மன நிம்மதியை இழக்கச் செய்த அந்தக் கடிதம் வந்தது. அவன் அந்தக் கடிதத்தைக் கொஞ்சம் மும் எதிர்பார்க்கவில்லை. அவன் தாய்ர்ர் இறந்து வெகு நாட்களுக் குப் பிறகு தகப்பளுர் இப்படி அடியோடு மாறிவிடுவார் என்று க்ன விலும் நினைக்கவில்ல். தன் தாயார் ஸ்தானத்தில் இன்ளுெருத்தி இருப்பதை அவளுல் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்பா எப்படி இவ்வித முடிவுக்கு வந்தார்? இவ்வள்வு விரைவில் அம்மா இறந்த துக்கத்தை எப்படி மறந்தார் என்பதுதான் அவனுக்கு ஆச் சரியமாக இருந்தது. - - - ஆப்பா இரண்டாந்தாரம் கல்யாணம் செய்துகொள்ளப் போகிருர் என்று நினைத்தாலே அவனுக்கு துக்கம் துக்கம்ாக வந்தது. ஐம்பது. வயதான தன் அப்பாவுக்கு இப்படி ஒரு மனத் தளர்ச்சி ஏற்படுவானேன் என்று நினைத்துக் கேசவன் மனம் புழுங்கினன்.

அப்பாவின் கடிதம் சுருக்கமாக, ஆளுல் அழுத்தமாக அவ குடைய தீர்மானத்தை அவனுக்குத் தெரிவித்தது. -

" அன்புள்ள கேசவனுக்கு, - அநேக ஆசீர்வாதம், இந்தக் கடிதத்தை மிகவும் அவசரத்தில் எழுதுகிறேன். விவரம் எல்லாம் நேரில் பேசிக் கொள்ளலாம். -