பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன லோசரிை 8t

நான் பல காரணங்களே உத்தேசித்து, முக்கியமாக உன் நன் மைக்காக, சுந்தரியை இரண்டாந் தாரமாக மணந்துகொள்ள நிச்ச யித்துவிட்டேன். உனக்கும் பரீட்சை முடிந்துவிட்டபடியிளுல் எப்படியும் நீ இங்கு வரவேண்டியதுதான். நீ இன்றே புறப்பட்டுவிடு. மற்றவை நேரில், அன்புள்ள,

அப்பர்.'

இந்தக் கடிதத்தைப் படித்ததும் கேசவன் தமிழ் சினிமாக்களில் வரும் கதாநாயகன் மாதிரி தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, 'அப்பா! அப்பா! அப்பா!' என்று மூன்று முறை அலறி ஞன். பிறகு, "ஹஹ் ஹஹ் ஹா!' என்று சினிமாச் சிரிப்பு ஒன்று: சிரித்தான். - - -

"ஐயோ! அன்புள்ள அப்பா ! என்ன அன்பு வேண்டிக் கிடக் கிறது! என்னுடைய நன்மையை உத்தேசித்துத்தான் இவர் மறு விவாகம் செய்துகொள்ளுகிருராமே! இப்படி எழுதினுல் இவருடைய சுயநலம் ஒருவருக்கும் தெரியாது என்று எண்ணமா...?? என்று: தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் கேசவன். அவன் உள்ளம் பொருமியது.

குழந்தைப் பருவத்திலிருந்து படிந்துவிட்ட அவனது முரட்டுப் பிடிவாத குணம் என்னும் பாம்பு தகப்பளுரின் கடிதத்தைக் கண்ட தும் சீறிப் படமெடுத்து ஆடியது. அப்பாவின் கடிதத்தில் கண்ட விஷயத்தைப் பற்றிச் சிறிதும் அவன் யோசித்துப் பார்க்க நினைக்க வில்லை, ஊருக்குப் போய் அப்பாவின் முகத்தில் விழிக்கவே அவ. னுக்கு விருப்பமில்லை. உடனே யாருடனும் சொல்லிக்கொள்ளாமல் எங்கேனும் ஒரு கண் காணுத தேசத்துக்குப் போய்விட வேண்டும் என்று அவன் மனம் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியது.

நல்ல வேளேயாக அவனது திட்டத்தை ஒழுங்காக நடத்து

வதற்குச் சாதகமாகப் பரீட்சையும் முடிந்துவிட்டது. அவன் அப் பொழுது இருந்த உள்ளக் குமுறலின் வேகத்தில், பரீட்சை முடிவைப் பற்றியோ தனது வருங்கால வாழ்வைப் பற்றியோ கொஞ்சங்கூடம் பொருட்படுத்தவில்லை. - - கேசவன் ஒரு துண்டுக் கடிதத்தை எடுத்து அதில் பின்வருமாறு

எழுதினன்: '

"அப்பா அவர்களுக்கு, -

என் நன்மையை உத்தேசித்து, நீங்கள் செய்ய உத்தேசித்திருக் கும் அக்கிரமமான காரியத்துக்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன். நேரில் அங்கு வந்து உங்களோடு இதுபற்றி வாதம் செய்து கசப்பை வளர்த்துக்கொள்ளவும் நான் தயாராய் இல்லை. நான் எங்கேயோ போகிறேன். என்னேத் தேட முயல்வது உங்களுக்கு வீண் சிரமம். - - -

" ... கேசவன்.”