பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன லோசனிை 65

தினசரி சித்தி அறுசுவைஉண்டி தயாரித்துக் கேசவனுக்கு அன் போடு பரிமாறினுள். கொஞ்சமும் அலுத்துக்கொள்ளாமல், சித்தி தனக்காகச் சமைத்துச் சமைத்துப் போடுவதைக் கண்டு கேசவன் அயர்ந்து போகுன்.

"இந்த உத்தமியை வீணுகத் தவருக நினைத்துப் பனம் அனுப்பா மல் மனசைப் புண்படுத்தி விட்டோமே!’ என்று அவன் மனம் மிக வும் பச்சாத்தாபப்பட்டது.

பத்து நாட்கள் ஆனந்தமாக ஓடின. -

அன்று காலேயிலே சித்தி பரபரப்பாக மூட்டை கட்டுவதில் முனைந்திருப்பதைப் பார்த்த கேசவனுக்கு என்ன சொல்லுவதென்று தேரியவில்லை.

'சித்தி, என்ன மூட்டை முடிச்சுகள் பலமாக யிருக்கிறதே! நீங்கள்......!' என்று மென்று விழுங்கி உளறிக் கொட் டிஞன்.

“...... ஆமாம். நான் ஊருக்குப் போகலாம் என்றிருக்கிறேன். நான் இங்கே வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன. பாவம், குழந்தை மீன லோசனி தனியாக அவதிப்படுவாள், தானே சமைத்துச் சாப் பிட்டுக்கொண்டு வேலைக்குப் போக வேண்டுமென்ருல் சிரமம் தானே!’ என்ருள் சித்தி.

"சித்தி! முத்துக் கோத்தாற்போல் எனக்குக் கடிதம் எழுதி யிருந்தாளே, அவளேத்தானே சொல்லுகிறீர்கள்?’ என்று தன் இன மீறிய உற்சாகத்துடன் பலமாகக் கேட்டுவிட்டான். ஆப்புறம் அவனுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.

சித்தி அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினுள். அதில் எல்லேயற்ற குது கலத்தையும் நானங் கலந்த அசட்டுக் க&ள்யையும் கண்டாள்.

கேசவன் பரபரஇவன்று உள்ளே போய்க் கையில் காகிதமும் பேளுவுமாகத் திரும்பி வந்தான்.

'சித்தி மீனலோசனியை இங்கேயே வரவழைத்து விடலாம்.

அவள் மட்டும் தனியே அங்கே இருப்பு:னேன்? நீங்கள் சொல்லுங் கள், நான் எழுதுகிறேன்...” என்ருன் கேசவன். ~.

சித்தி அடக்க முடியாத வியப்புடன் வாக்கியம், வாக்கியமாகச் சொல்ல, கேசவன் எழுதலாளுன்.

கேசவனது கடிதம் கிடைத்த இரண்டாம் நாள் மீன லோசரிை புறப்பட்டு முசிரிக்கு வந்து சேர்ந்தாள். மீனலோசனியின் விஜயகு திால் அந்த வீடு முழுவதும் புதிய ஒளி வீசியது. கேசவனின் இன்ன் மும் இனம் தெரியாத இன்பத்தில் விம்மியது.

பr-5