பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாற் கடல்

'மீனலோசனி என்று இவ்வளவு அழகாக இவளுக்கு யார் பெயர் வைத்தது? என்ன விசாலமான கண்கள்! அவற்றில்தான் என்ன கவர்ச்சி தாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே!’ என்று கேசவனின் மனம் மீனலோசனியின் கரிய பெரிய விழிகளைப் பார்த்துக் கவி பாடத் தொடங்கியது.

பசித் தி, மீனலோசனி உங்களுக்கு என்ன உறவு? அதைப் பற்றி நானும் உங்களைக் கேட்கவில்லை; நீங்களும் சொல்லவில்லையே!” என்ருன் கேசவன்,

'மீன லோசனி என் தம்பியின் மகள். தாய், தந்தையரை இள மையிலேயே இழந்துவிட்ட அநாதைப் பெண் . அவளே எத்தனேயோ கஷ்டங்களுக்கு இடையில் படிக்க வைத்தேன். பொறுப்புத் தெரிந் தவளாதலால், ஆரும் படிவத்துடன் படிப்பை நிறுத்திக்கொண்டு உபாத்தியாயினிப் பயிற்சியில் தேறி அங்கேயே ஒருபள்ளிக்கூடத்தில் வேலையும் தேடிக்கொண்டாள். அவளே ஒருவனிடம் ஒப்படைத்து விட்டால்...... ’ என்று சித்தி கூறிக்கொண்டிருக்கும் போதே கேச வன் இடைமறித்து, 'சித்தி, நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண் டாம். இது உங்கள் வீடு, நான் உங்கள் மகன், நீங்கள் என் தாய்...... ’’ என்ருன் உணர்ச்சி பரவசத்துடன்.

'இப்பொழுதுதான் உன்னேப்பற்றி உன் தகப்பனுர் சொன்னது நினைவுக்கு வருகிறது. சுந்தரி கேசவன் அருமையான பிள்ள்ை. கொஞ்சம் முரட்டுத்தனம் உண்டு. சின்ன வயசிலேயே தாயாரை இழந்து விட்டபடியினுல் தாயன்பைப் பெருதவன், உடன் பிறப்பி லும், சகோதரர்களோ, சகோதரிகளோ இல்லையாகையினுல் அவ னுக்கு யாருடனும் அன்பாகப் பழகத் தெரியாது. எப்படியும் ஒரு நாள் அவனே நீ சந்திப்பாய். அவனேப் பொறுப்புள்ள மனிதனுக்க வேண்டியது உன் பொறுப்பு. என்னுடைய இந்த வயதில் உன் கரம் பற்றுவதே இந்தக் காரணம் பற்றித்தான். இருபத்தெட்டு வயதான ஏழைப் பெண்ணுகிய உனக்கு வாழ்வளிப்பது மட்டும் என் நோக்க மல்ல. கேசவனுக்கு ஒரு தாயாரும் கிடைப்பதனுல்தான் உன்னை மணக்க இசைந்தேன். உன் அன்பிளுல்தான் அவனே வழிப்படுத்த முடியும். மீனலோசனியையும் அவனிடம் ஒப்படைத்துவிடு......” என்ருர் உன் அப்பா!'

"......சித்தி, நான் மகா பாதகன். அப்பாவின் அருமை தெரி யாமல் அவர் மனத்தைப் புண்படுத்திவிட்டு, ஊரைவிட்டே ஓடிவிட் டேன்......!" என்று கேசவன் கூறிவிட்டு மேலே பேச முடியாமல் விம்மினுன். - -

அஜந்தா சித்திரம்போல் சித்தியின் அருகில் நின்றுகொண் டிருந்த மீனலோசனியின் விசாலமான நயனங்கள் இதைக் கேட்டு ஏளுே நீரைப் பெருக்கின.