பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金 பாற் கடல்

எஞ்சினியர்களும், மேஸ்திரிகளும் சம்பளம் தருபவன் கம்பெனிக் காரன் தான்; சங்கரன் அல்ல என்ற விஷயத்தையே நினைக்காமல் குதிகால் கீழே படாமல் ஓடினர்கள்! எப்படியாவது சங்கரன் கண் பார்வையில் படாமல், எங்கேயாவது ஓரிடத்தில் நின்று கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் அப்படி ஒடிஞர்களோ அல்லது உண்மையில் ஈசுவரனை அந்த இடத்துக்குச் கைப் பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தி விட வேண்டுமென்ற எண்ணத்தில் உயர்தர அதிகாரியின் திருப்தியைச் சம்பாதித்துக் கொண்டால் தான் பிழைப்பைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற உணர்வில் ஓடினர்களோ! மூலைக் கொருவராக, காக்கைக் கூட்டத்தின் நடுவில் கல் விழுந்ததுபோல் சிதறிக் கலைந்து ஓடி விட்டனர் அத்தனே பேரும். . . . . -

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கச் சுற்று முற்றும் பார்த்தார் சங்கரன். கோபம் கொந்தளித்தது அவர் பார்வையில்.

தாற்காலிகப் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. குறுகிய கால அளவில் எவ்வளவு திறமையாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு திறமையுடன் கட்டப்பட்டிருந்தது அது என்பது அந்த நிபுனரின் கண்களுக்குப் புலப்படாமல் போகவில்லை. ஆனல் முதலிரண்டு நாட்களில் பெய்த பெரும் பேய் மழையின் காரணமாக, அந்த ஆற்றில் கரைபுரன்டு பெருகி வந்த வெள்ளத்தால், அங்கங்கே பாலத்துக்கு ஆதாரமாக நிறுத்தப்பட்டிருந்த தூண்கள் மட்டும் அரிக்கப்பட்டு, ஒரளவு பலகீனப்படுத்தப்பட்டிருந்தன. கரை யிலிருந்தபடியே ஒரு கா லேப் பாலத்தின் மீது வைத்துப் பார்த்த சங்கரன் ஏளுே பின் வாங்கிஞர். - வேலையை முடித்து விட்டால் போதுமா? இந்த மழையில் செய்து முடித்த வேலை, எந்த நிலையில் இருக்கிறது என்று கவனித்துக் கொள்ள வேண்டாமா? வேலை முடிந்த பின் எக்கேடு கெட்டுப் போளுலும் போகட்டும் என்று இருந்து விடுவதா? அதுவும் பிரதம எஞ்சினியரான அவர் பார்வையிட வரும்போது இருந்து பதில் சொல்ல வேண்டியவரல்லவா. ஈசுவரன்? அதற்குக் கூட வரமுடிய வில்லையா அவரால்? - -

இந்த எண்ணத்தின் விளேவில் புகைந்த ஆத்திரம்தான் சங்கரனின் குரலே உயர்த்திக் காட்டியது. . . . . . . . . .

"ஈசுவரன் எங்கேய்யா?” "பொறுப்பில்லாத மனுஷன்: 'சிக்கிரம் கூப்பிடய்யா!' - கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார் சங்கரன். ふ一ー - ー மூலக்கொருவராக ஓடிய சிப்பந்திகள், வ்வொருவராகக் திருடிேத் ஃாஃ':