பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன லோசனி 6?

‘'கேசவா! இப்பொழுதாவது உனக்கு அப்பாவின் அருமை தெரிந்ததே! என்னிடம் உனக்கு அநாவசியமாக ஏற்பட்டிருந்த கோபமும் இப்போது தணிந்திருக்கும். உன் மனத்தில் இருப்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் ஊரைவிட்டுப் போனது. இப்பொழுது என்னேவிடப் பாக்கியசாலி யாரும் இல்லை......' என்ருள் சித்தி, -

"சித்தி, என்னே மன்னித்து விடுங்கள். இப்பொழுதுதான் நான் மனிதனுனேன். பழைய நிகழ்ச்சிகளே மறந்து விடுங்கள்!” என்ருன் கேசவன்.

'சரி, இரண்டு பேரும் வாருங்கள், இலே போடுகிறேன். சாப் பிட்டுவிட்டுப் பேசலாம்' என்று கூறியபடி சித்தி அங்கிருந்து எழுந்து உள்ளே சென் ருள்.

'மீனலோசனி, உன் எழுத்தைக் கண்டே உன் அழகை மதிப் பிட்டுவிட்டேன்!”

“. . . . . . அது ரொம்பத் தவறு. நீங்கள் என் கடிதத்தைக் கொண்டு என்னே மதிப்பிட்டது போல் நீங்கள் முன்பு உங்கள் தகப்பளுருக்கு எழுதிய கடிதத்தைக் கொண்டு உங்களே நான் மதிப்பிட்டிருந் தால்......என்ன ஆகும்?" .

தங்கச் சிலே வாய் திறந்து பேசியதுபோல் இருந்தது, கேசவ ஆணுக்கு மீனலோசனியின் பேச்சு. விசாலமான அவளது கண்களின் குறும்புப் பார்வை அவனேக் கந்தர்வ லோகத்துக்குத் துக்கிச்

சென்றது.

- 'மீனலோசனி, அந்தப் பழைய கேசவன் அல்ல, இப்பொழுது நான். உன் பார்வையின் சக்தியினுல் மனிதனுகிவிட்டேன். வந்து....

o...... மணந்துகொள்ள உனக்கு இஷ்டந்தானே?"

'அந்தக் கேள்வியை......... நானல்லவா உங்களேக் கேட்க

வேண்டும்? என்று சிரமப்பட்டுக் கூறிவிட்டு நாணத்தோடு முகத் தைக் கவிழ்ந்துகொண்டாள் மீனலோசரிை,

கேசவன் அளவற்ற மகிழ்ச்சியோடு அவள் மென்கரங்களேப் பரிவோடு பற்றிஞ்ன்.