பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம்

நமஸ்காரம். சேஷமம். சேஷமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவ தில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கிற போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றுமுற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா .டின் பெண்டாட்டிக்குக் கடிதம் எழுதப் போகிறீர்கள்? அகளுல் நானே முதலில் எழுதினதாகவே இருக்கட்டும். அகமுடையன் உங்கள் மாதிரி யிருந்தால் தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கிவைக்க முடியும்? அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீளுய்ப்போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதாசு எழுதிக்கருள்!’ என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் சி லிடிக்காமல், அவாள் கன்னத் திலேயே இடித்துக்கொண்டு பண்ண லாம். பண்ணினுல் பண்ணட்டும்.பண்ணட்டும்; ” யாச்சு. எழுதினது எழுதின துதான். அதை நீங்கள், தலே 1ம் அதுவுமாய், அவ்வளவு துாரத்திலிருக்கிறவர், படி ததுதான். எழுதினதைப் படித்த பின், எழுதினவாளும் ளும், குற்றத்தில் ஒண்ணு தானே? வேறு எதிலும் ஒற்றுமை யிருக்கிறதோ இல்லேயோ?

இதென்ன முதல் கடிதமே முகத்தில் அறையற மாதிரி ஆரம்பிக் கிறது என்று தோன்றுகிற தோன்னுே? சரி, நான் அசடு, டோங்கோ ளேன்; திருப்திதானே? நான் வெகுளி. என் மனசில் எனக்கு ஒண் னும் வைத்துக் கொள்ளத் தெரியாது. அப்பாகூட அடிச்சுப்பார்: சஜகதாகிட்டே யாரும் அசதி மறதியாக்கூட ஒரு ரகஸ்யத்தைச் சொல்லிவிடாதேயுங்கள். ஒருத்து கிட்டேயும் சொல்லக் கூடாது. என்ருல் ஒரு கடிதா சுத் துண்டிலேயாவது அதை எழுதி எறிந்து விடுவாள். இல்லாவிடில் அவளுக்கு மண்டை வெடித்துவிடும். ஜகதா அவ்வளவு ஆபாத்தான மனுவி. ஆமாம், அப்படித்தான் வைத்துக்கொள்ளுங்கள். நான் பின் யாரிடத்தில் சொல்லிக்கொள் வது, தலே தீபாவளிக்கு என் கணவர் என்னுடன் இல்லாத கஷ் டத்தை? என் அப்பா அம்மாவுக்கு எழுதலாமா? எழுதினுல், புக்க கத்து விஷயங்களைப் பிறந்த வீட்டுக்கு விட்டுக்கொடுத்தாள் என்கிற பொல்லாப்பைக் கட்டிக்கவா? நான் அசடா யிருக்கலாம்; ஆளுல் அவ்வளவு அசடு இல்லை. அப்புறம் எனக்கு யாரிருக்கா, நீங்களே சொல்லுங்களேன்!