பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?g பாற் கடல்

'இல்லேயே, நிறைய இருக்கே!'

'இருக்கோன்னுே? அதான் கேட்டேன்; அதான் சொல்ல வந்தேன், கிணற்து ஜலத்தை சமுத்திரம் அடித்துககொண்டு போக முடியாதுன்னு! நேரமாச்சு, சுவாமி பிரையின் கீழ்க் கோலத்தைப் போடு- என்று குஞ்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே போய்

விட்டனர்.

நான் கின ற்றடியிலேயே இன்னும் சற்று நேரம் நின்றிருந்தேன். நெஞ் சில் சின்னதாய் அகல் விளக்கை ஏற்றிவைத்த மாதிரி யிருந் தது. மேலே மரத்திலிருந்து பவழ மல்லிகள் உதிர்ந்து கிணற்றுள் உதிர்த்து கொண்டிருந்தன. தும்பை யறுத்துக்கொண்டு கன்றுக் குட்டி முகத்தை என் கையில் தேய்த்துக் கொண்டிருந்தது.

இந்த வீட்டில் யார்தான் பளிச்சென்று பேசுகிருர்கள்? வெளிச் சம் எல்லாம் பேச்சில் இல்லை. அதைத் தாண்டி அதனுள்தான் இருக்கிறது. -

ஆனுல் ஊமைக்கு மாத்திரம் உணர்ச்சி யில்லையா? அவர் களுக்.இத்தான் அதிகம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆளுல் நீங்கள் அசல் ஊமையில்லேயே, ஊமை மாதிரிதானே! எனக்கு ரெஸ்பெக்டே' இல்லையோன்ளுே? ஆமாம், அப்படித்தான். நான் உங்களுக்கு இப்போ கடிதம் எழுதவில்லை. உங்களுடன் கடிதத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்; இல்லே, கடிதாசில் சிந்தித்துக்கொண் டிருக்கிறேன். என் யோசனை என்னுடையது. அதை யாராலும் தடுக்க முடியாது. என்னுலேயே தடுக்க முடியாதே, நான் என்ன செய்வேன்? நான்தான் அப்பவே சொல்லிவிட்டேனே, என் நெஞ்சி லிருக்கிறதை அப்படியே கொட்டிவிடுவேன் என்று.

எனக்கு மாத்திரம் தெரியாதா, நீங்கள் நெஞ்சிலே முள் மாட் டிண் ட மாதிரி, கண்டத்தை முழுங்கிண்டு, முகம் நெருப்பாய்க் காய, வாசலுக்கும் உள்ளுக்குமா அலேஞ்சது? அப்போ உங்களுக்கு மாத்திரம் என்ளுேடு பேச ஆசையில்லை என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? அதை நினைத்தால்தான் எனக்குத் துக்கம் இப்போகூட நெஞ்சை யடைக்கிறது. நீங்கள் என்ன பேச வேண் டும் என்று நினைத் தீர்களோ? அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இதற்கு முன்னுல் நீங்கள் யாரோ, நான் யாரோ? பரதேசிக் கோலத்தில் படி தாண்டி உள்ளே வந்து என் கையை தீங்கள் பிடித் ததும், ஜன்மேதி ஜன்மங்கள் காத்திருந்த ஒரு காரியம் நிறைவேறி விட்டாற்போல் எனக்குத் தோன்றுவானேன்?

அப்படிக் காத்திருந்த பொருள் கைகூடிய பின்னரும், இன்ன மும் காத்திருக்கும் பொருளாயே இருப்பானேன்? இன்னமும் ஜன் மங்களின் காரியம் நிறைவேற வில்லையா? இப்பொழுது நெருப்பு