பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் : 73

என்ருல் வாய் வெந்துபோய் விடாது. தாலி கட்டின வீட்டில் அடித்து விழுகிருயே என்று கேட்காதேயுங்கள். இப்பொழுது நான் சொல்லப்போவதைத் தைரியமாய்த்தான் சொல்லவேனும், நீங்கள் எங்கேயோ காம்ப்' என்று தூரதேசம் போய்விட்டீர்கள். இந்த நிமிஷம் எந்த ஊரில் எந்த ஹோட்டலில், சத்திரத்தில், எந்தக் கூரை யைப் பார்த்து அண்ணுந்து படுத்தபடி என்ன யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ? நானும் புழுங்கிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு எதுவும் நேராது என்று என்ன நிச்சயம்? நினைக்கக்கூட நெஞ்சு கூசிஞலும், நினைக்கத்தான் செய் கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்த அந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும், இவ் வளவு சுருக்க, இவ்வளவு நாள் பிரித்திருக்கும் இந்தச் சமயத்தில், நம்மிருவரிடையிலும் நேர்ந்திருக்கும் ஒரு ஒரு பார்வையும், மூச்சி லும் தாழ்ந்திருக்கக் கூடிய ஒன்றிரண்டு பேச்சுக்களும், நாடியோ, அகஸ்மாத்தாகவோ, ஒருவர் மேல் ஒருவர் பட்ட ஸ்பரிசமோ, நினே வின் பொக்கிஷமாய்த் தான் தோன்றுகிறது. நாங்கள் அம்மாதிரி பொக்கிஷங்களேப் பத்திரமாய்க் காப்பாற்றுவதிலும், அவைகளே நம்பிக் கொண்டிருப்பதிலும் தான் உயிர் வாழ்கிருேம்.

என் தகப்பளுருக்கு வாசலில் யாராவது வயதானவர்களாய்ப் போல்ை, அவரை அறியாமலே அவர் கைகள் கூப்பும். 'என் னப்பர்?' என்று கேட்டால் சொல்வார். 'அம்மா, இந்தக் கிழவளுர் வயசு நான் இருப்பேளு என்று எனக்கு நிச்சயமில்லே. காலமே அல் பாயுசுக் காலமா யிருக்கிறது. இந்த நாளில் இத்தனே வயசு வரைக் கும் இருக்கிறதே. காலத்தையும் வயசையும், இவர் க்ள் ஜயம் கொண்ட மாதரிதானே? இவர்களுடைய அந்த வெற்றிக்கு வணங்கு கிறேன்." அவர் வேணுமென்றே குரலேப் பணிவாய் வைத்துக் கொண்டு அப்படிச் சொல்கையில், ஏதோ ஒரு தினுசில் உருக்கமா யிருக்கும்.

ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத்தி லேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன் னேத் தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ்டாந்தம் இல்லையா? நீங்கள் இப்பொழுது நால்வராயிருப்பவர்கள், ஐவராயிருந்தவர்கள் தானே?

கடைசியில் எதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந் தேனுே, அதுக்கே வந்துவிட்டேன். நீங்கள் இல்லாமலே நடந்த தலைதீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றித்தான்.

அம்மாவைப் பார்த்தால் ஒரு ஒரு சமயம் பிரமிப்பாய்த்தா னிருக்கிறது. அந்த பாரி சரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிருர், எவ்வளவு வேலை செய்கிருர், ஒய்ச்சல் ஒழிவில்லாமல்! சிறிசுகள் எங்களால் அவருக்குச் சரியாய்ச் சமாளிக்க முடியவில்