பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金母 பாற் கடல்

அதற்குக் கேள்வி முறை கிடையாது. அதற்கென்ன செய்வது? நான் அப்படி யிருந்தால், என் தாயும் என்னிடத்தில் அப்படித்தான் இருப்பாளோ என்னவோ? ஆளுல் அம்மா ஏதோ, தன் வார்த்தை செல்றதுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ்வளவு பெரிய சம்சாரத் தில் இத்தனே சிறிசுகள், பெரிசுகள், விதவிதங்களினிடையில் உழல் கையில், எந்தச் சீலத்தை உண்மையில் கொண்டாடிக்கொள்ள முடியும்?

ஒரொரு சமயம் அம்மா சொல்வதைப் பார்த்தால், என்னவோ நாங்கள் ஐந்து பேர்களும் வெறுமென தின்று தெறித்து வளைய வரு கிற மாதிரி நினைத்துக்கொள்ளலாம். ஆளுல் இந்த வீட்டிற்கு எத் தனே நாட்டுப் பெண்கள் வந்தாலும், அத்தனே பேருக்கும் மிஞ்சி வேலையிருக்கிறது. சமையலே விட்டால், வீட்டுக் காரியம் இல் இல்யா, விழுப்புக் காரியம் இல்லேயா, குழந்தைகள் காரியம் இல்லேயா, சுற்றுக் காரியம் இல்லையா? புருஷாளுக்கே செய்யற பணிவிடைக் காரியங் கள்,... அதெல்லாம் காரீயத்தில் சேர்த்தி யில்லேயா? இந்த வீட்டில் எத்தனே பேர்கள் இருக்கிருர்களோ அத்தனே பந்திகள். ஒவ்வொருத் தருக்கும் சமயத்திற்கு ஒரு குணம். ஒத்தருக்குக் குழம்பு, ரஸ்ம், மோர் எல்லாம் கிண்ணங்களில் கலத்தைச் சுற்றி வைத்தாக வேண்டும்; ஒருத்தருக்கு எதிரே நின்று கொண்டு கரண்டி கரண் டி. பாய்ச் சொட்டியாக வேண்டும். நீங்களோ மெளன விரதம்! த8ல யைக் கலத்தின் மேல் கவிழ்த்துவிட்டால் சிப்பலேச் சாய்க்கக்கூட முகத்திற்கும் இலக்கும் இடையில் இடம் கிடையாது; ஒருத்தர் சதர சளசளா வளவனாகலத்தைப் பார்த்துச் சாப்பிடாமல் எழுந்த பிறகு "இன்னும் பசிக்கிறதே, ஏலம் சாப்பிட்டேனுே? மோர் சாப்பிட் டேளுே?’ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே யிருப்பார், குழந்தை களேப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லே. х 3.

எல்லோர் வீட்டிலும் தீபாவளி முந்தின. ராத்திரியானுல் நம் வீட்டில் மூணு நாட்களுக்கு முன்னதாக வந்துவிட்டது. அரைக் கிறதும், இடிக்கிறதும் கரைக்கிறதுமாய்... அம்மா கை எப்படி வாஸிக் கிறது மைஸ்கிர்ப் பாகு கிளறும்போது கம்மென்று மனம் கூடத் தைத் தூக்குகிறது. நாக்கில் பட்டதும் மணலாய்க் கரைகிறது. அது மணல் கொம்பா, வெண்ணெயா? எதை வாயில் போட்டாலும் உங் களே நினைத்துக் கொள்வேன். நீங்கள் என்ன செய்துகொண் டிருக்கிறீர்கள்? மெளனம் ஒன்றைத் தவிர வேறெதைத் தனியாய் அநுபவிக்க முடியும்? மெளனம் கூட ஒரு "ஸ்டே'ஜிற்குப் பிறகு அது பவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹித்துக்கொள்கிற சமா சாரம்தான். உங்களுக்கும் எனக்கும் மெளனமாயிருக்கிற வயசா? நெஞ்சக் கிளர்ச்சியை ஒருவருக் கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் இன்னமும் சொல்லிக்கொள்ளும் நாளல் லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியாயிருக்கிறேள்? நீங் கள் புருஷாள். உங்களுக்கு உண்மையிலேயே விரக்தி யிருக்கலாம்.