பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன . 5

"ஈசுவரன் வீட்டில் இல்லை" என்ற-கோபம் விளைவிக்கக் கூடியபதிலைச் சொல்லித் தீர வேண்டிய பெரும் பொறுப்பு விழும். பிழைப்பைக் கெடுத்துக்கொள்ள அவர்கள் எவருமே தயாரா யில்லையாதலால் தயங்கித் தயங்கி அடிமேலடி வைத்துப் பூமேல் நடப்பவர்கள் போல மெள்ள மெள்ள ஊர்ந்து வந்தார்கள்.

இது போதாதாசங்கரனின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட?

"எனக்குத் தெரியுமய்யா! வேலையை முடித்து விட்டோம் என்ற கர்வம்! நான் வந்து கேட்டு அவர் பதில் கிசால்லக் கூடாதென்று ஏதோ ஒரு சாக்குச் சொல்லி ஓடி இருப்பார்! ஆள் அப்படிப் பட்டவர்தானே! எனக்கு அப்படித் தானய்யா தோன்றுகிறது:” என்று இரைந்தார். -

ஈசுவரன் கடமையில் கருத்துள்ளவர். அப்படியெல்லாம் செய்யக் கூடியவரல்ல; நிச்சயமாகச் செய்ய மாட்டார் என்பது அங்கிருந்த ஊழியர்கள் அத்தனே பேருக்கும் தெரியும். ஆளுல் அதை வாய் விட்டுச் சங்கரனிடம் சொல்லக்கூடிய தைரியம் மட்டும் துரதிருஷ்ட வசமாக யாருக்குமே வரவில்லை. ஒரு முறை எச்சிலை விழுங்கி எல்லோரும் தம் நெஞ்சிலிருந்து வார்த்தையை உள்ளே தள்ளிவிட்டு ஜீரணித்துக் கொண்டார்கள். தவறி வெளியே வந்து

..? .

விட்டால்........

தம் கடமை என்ன என்று யோசிப்பவர் போல, சங்கரன் தோப்பியை ஒரு முறை கழற்றி, தலையை மெதுவாகத் தடவி விட்டுக் கொண்டார். -

'கொஞ்சம் முன் ஜாக்கிரதையுடன் கடமையைச் சரியாகச் செய்திருந்தால், இந்த வெள்ளம் பாலத்தைப் பாதித்திருக்காது. இத்தனை உதவாக்கரை ஆட்கள் இங்கே கூட்டம் போட்டுக் கொண்டு வேலை செய்து என்ன லாபம்? வேலையில் அக்கறை உள்ளவர்கள், வேலை கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், கடமையைச் சரியாக உணர்ந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் எல்லாம் என்னுடன் கீழே இறங்கி வரலாம். ஈசுவரனைப் போல ஒதுங்கி......சரி அது எதற்கு? வருபவர்கள் வரலாம் என்று பிரசங்க பாணியில் கூ விட்டு, ஆற்றை நோக்கி நடந்தார் சங்கரன். , ,

தாற்காலிகப் பாலத்தின் பக்கத்தில், சங்கரின் உள்ளிட்ட நிபுணர்கள் நின்றிருந்த ஆற்றின் கரையில், ஆற்றின் மேட்டில் குவிக்கப் பட்டிருந்த பெரிய பெரிய பாருங்கற்கள் மலைபோல் குவிந்து. தாறுமாருக உருண்டு கிடந்தன. மெல்ல மெல்லக் கால்களை அவற்றின் மீது ஊன்றி வைத்தபடி சங்கரன் ஒவ்வொரு அடியாக ஆற்றுக்குள் இறங்கத் தொடங்கினர். -

மற்றவர்களோ மரண பயம் பின்னே இழுக்க, அதிகாரி பயம் ஆன்னே தள்ள, இரண்டடி முன்னும் இரண்டடி பின்னும்ாக நகர்ந்து.